வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் ஈரோடு மாநகராட்சி வைராபாளையம் பகுதியில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்து, விவசாயிகளுக்கு நெல்கொள்முதல் செய்ததற்கான ரசீதினை வழங்கினார்.
உடன் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, வருவாய் கோட்டாட்சியர் (ஈரோடு) பிரேமலதா, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மேலாளர் முருகேசன் உட்பட பலர் உள்ளனர்.



