ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டத்திற்கு உட்பட்ட கொல்லன் கோயில், சிவகிரி பேரூ ராட்சிகள் மற்றும் அஞ்சூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் நேற்று (ஆக.11) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி புதிய திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
முதல்வர், ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார்.
அத்திட்டங்களை செயல்படுத்துவது தொடர் பாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற் கொண்டு வருகிறார்.
கொடுமுடி வட்டம் கொல்லன்கோயில் பகுதி யில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தரைமட்ட பாலத்தினை உயர்மட்ட பாலமாக அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
கொடுமுடி வட்டம் சிவகிரி சந்தை பேட்டை அம்மன் கோயில் பகுதி பொதுமக்கள் கொடுமுடி வட்டம் எழுமாத்தூர் பகுதி யில் 25 ஏக்கர் பரப்பளவில் 1300 மாணவர்கள் பயிலும் அரசு கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரி இயங்கி வருகிறது. மகளிருக்கென தனி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்து தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் அமைச்சரிடம் மனு அளித் திருந்தனர்.
அப்பகுதியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பது தொடர்பாக உடனடியாக அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு கல்லூரி அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத் தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இடத் திற்கான முன்மொழிவினை உடனடியாக சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
சிவகிரி பேரூராட்சி பேருந்து நிலையத்திற்கு எதிரில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் லு ஏக்கர் பரப்பளவில் தினசரிசந்தை அமைப்பது தொடர் பாக கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அப்பணிகள் குறித்து ஆய்வு மேற் கொண்டார்.
சிவகிரி பேரூராட்சியில் ரூ.12 இலட்சம் மதிப் பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணியினையும், ரூ.13.50 கோடி மதிப்பீட்டில் 160 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டி அமைக்கும் பணியினையும் பார்வையிட்டார்.
காரவலசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பழுதடைந்த கட்டிடங் களுக்கு பதிலாக புதிய நூலகம் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
அஞ்சூர் ஊராட்சியில் கரூர் – ஈரோடு மாவட் டங்களை இணைக்கும் பாலமாகவும் விவசாயிக ளின் அன்றாட தேவைக் காக முத்தூர் செல்லும் தொலைவினை குறைக்கும் வகையிலும் உள்ள பொரசபாளையம் நொய்யல் ஆற்றுபாலத்தில், தரை மட்ட பாலத்தினை உயர்மட்ட பாலமாக அமைப்பது தொடர்பாக, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுவினை பெற்றுக் கொண்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுகளின் போது ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் பெ.பிரேமலதா, கொடுமுடி வட் டாட்சியர் எஸ்.ஸ்ரீதர் உட்பட அலுவலர்கள் உட னிருந்தனர்.



