fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு சிறந்த செயல்திறன் விருது வழங்கல்

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு சிறந்த செயல்திறன் விருது வழங்கல்

நபார்டு வங்கியின் 41-வது ஆண்டு துவக்க விழா சென்னையில் நபார்டு வங்கி முதன்மை பொதுமேலாளர் டி.வெங்கட கிருஷ்ணா தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் 2021&-22-ம் ஆண்டில் நிதியியல் கல்வி விழிப்புணர்வு முகாமினை (Financial & Digital Literacy Programme)சிறப்பாக செயல்படுத்தப்பட்டமைக்கு ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிக்கு சிறந்த செயல்திறன் விருதை (Best Performance Award) நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன், வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ் ம ற்றும் வங்கி மேலாண்மை இயக்குநர் மரு.சு.செந்தமிழ்செல்வியிடம் வழங்கினார்.

ரிசர்வ் வங்கியின் முதன்மை பொது மேலாளர் உமா சங்கர், இந்தியன் ஓவர்சிஸ் வங்கி தலைமை நிர்வாக அதிகாரி பார்த்த பிரதீம் சென்குப்தா, இந்தியன் வங்கி தலைமை நிர்வாக அதிகாரி சாந்தி லால் ஜெயின், தமிழ்நாடு வேளாண் பல்க லைக்கழகம் (கோவை) துணைவேந்தர் டாக்டர் ஜி.கீதாலட்சுமி மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img