கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி, மலபார் கோல்டு, டைமண்ட்ஸ் ஈரோடு ஷோரூமில், வரும் டிசம்பர் 5-ம் தேதி வரை நடை பெறுகிறது.
கண்காட்சியை சிட்டி மதியழகன், (சிட்டி பேஷன், திருச்செங்கோடு), கார்த்திகேயன், பிருந்தா கார்த்தி கேயன், (எம் எல் டிரேடர்ஸ், ஈரோடு), செல்வராஜ், சந்திரசேகர், (செல்வாஸ் குரூப் ஆப் கம்பெனிஸ், சென்னிமலை) ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மலபார் கோல்டு டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் அணிந்தாலே ஜொலிக்கும் வைரநகைகளான ‘மைன்’, பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட் டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’, மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’, கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’, நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான ‘டிவைன்’, குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ ஆகி யவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
கடந்த 27-ம் தேதி துவங்கிய இக்கண்காட்சி, கலைகளில் ஆர்வமுள்ளவர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும்.
வரும் டிசம்பர் 5-ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில், நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம்.
மலபார் கோல்டு டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 270-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன், உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், சேலம், திருச்சி, ஈரோடு, வேலூர், இராமநாதபுரம், தருமபுரி, தஞ்சாவூர், கும்பகோணம், ஆகிய நகரங்களில் 17 கிளைகளைக் கொண்டுள்ளது.
ஈரோடு மலபார் கோல்டு டைமண்ட்ஸ் கிளை தலைவர் முஹமது அஸ்ரப், துணை கிளை தலைவர் தியாகராஜன், துணை கிளை தலைவர் ரினீஷ், துணை வர்த்தக மேலாளர் அருள்பிரகாஷ் மற்றும் கிளை ஊழியர்கள் கண்காட்சி துவக்க விழாவில் பங்கேற்றனர்.



