கோவை மாநகராட்சி 53 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக தலை மையிலான முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எம்.டி.மோகன் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மசக்காளிபாளையம், இந்திரா காலனி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது திமுகவின் மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம் மற்றும் வேட்பாளர் மோகன் ஆகியோர் இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஆர்.தேவராஜ், பொருளாளர் யு.கே.சுப்பிரமணியன், கிழக்கு மண்டல செயலாளர் மு.வ. கல்யாணசுந்தரம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



