அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் கல்வி பிரிவு கௌரவ தலைவராக, கல்வி பணி சமூகப் பணியில் சிறந்து விளங்கும் ஆர்.கே.வி பள்ளி தாளாளர் எம்.தர்ம கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழக நிறுவன தலைவர் ஆர்.கே.குமார், கல்வி பிரிவு கௌரவ தலைவருக்கான அடை யாள அட்டையை அவரு க்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்
1972 முதல் சிறப்பான கல்வி பணியை செய்து வரும் ஆர்.கே.வி பள்ளி தாளாளர் மற்றும் நிர்வாக இயக்குநர் பொறுப்பை 2011-ல் ஏற்ற சமூக ஆர்வலர் எம்.தர்ம கண்ணனின், சீரிய தலைமையில் இன்று 1650 மாணவ மாணவிகள் பயிலும் சிறப்பான கல்வி நிறு வனமாக மாறி உள்ளது
தனியார் பள்ளிகள் நிர்வாக குழு தலைவர், ரோட்டரி சங்க கல்வி துறை தலைவர் என பல பதவி வகித்தவர்.
தற்போது, அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் கல்வி பிரிவு கௌரவ தலைவராக பொறுப்பேற்று உள்ளார்
அவருக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழக நிர்வாகிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.



