ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஓர் அங்கமான கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ஈரோடு அருகே தமிழகத்தின் நெசவு மற்றும் நூற்பு தொழிலின் முக்கியமையமாக திகழும் பள்ளிபாளையத்தில், ‘ஆதித்ய பிர்லா பப்ளிக் பள்ளி’ என்ற பெயரில் புதிய பள்ளியை திறக்க உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழாவின் போது, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திலிப்கவுர் கூறியதாவது: ஆதித்ய பிர்லா குழுமத்தை பொறுத்தவரை எங்களின் அனைத்து வர்த்தக மும்சமூக முயற்சி களும் வாழ்க்கையை மேம்படுத்தும் திறன் கொண்டவை என்று முழு¬ மயாக நம்புகிறோம்.
கல்வி என்பது அத்தகைய சமூக முயற்சிகளில் ஒன்றாகும். பள்ளி பாளையத்தில் இப்பள்ளி திறக்கப்படுவதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் நல்வாழ்வுக் கான பங்களிப்பை கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் வழங்க உள்ளது.
ஆதித்ய பிர்லா குழுமம் இந்தியா முழுவதும் 56 பள்ளிகளை நடத்துகிறது. இங்கு 46,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படுகிறது.
பள்ளிபாளையத்தில் துவக்கப்பட உள்ள ஆதித்ய பிர்லா பப்ளிக் பள்ளி, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்டு ஆரம்பத்தில் 7-ம் வகுப்பு வரை இரண்டு பிரிவுகளுடன் துவக்கப்பட உள்ளது.
பின்னர் ஆண்டு தோறும் ஒரு வகுப்பு கூட்டப்பட்டு இறுதியில் 12-ம் வகுப்பு வரை செயல்பட இருக்கிறது. முதல் கல்விஆண்டில் 700 மாணவர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.
அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த வகுப்புகளை துவக்குவதன் மூலம் ஒட்டு மொத்தமாக ஆண்டுக்கு 1400 மாணவர்கள் பலன் பெறுவார்கள்.
தரமான கல்வி என்பது மக்களை தெளிவாகவும் சுதந்திரமாகவும் சிந்திக்க ஊக்குவிக்கிறது என்பதை நம்புகிறோம். இந்த பள்ளி ஈரோடு, பள்ளிபாளையம் குழந்தைகளுக்கு உயர்ந்த கல்வி அளிப்பதோடு மட்டுமல்லாமல், மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்பு வழங்கும் என்றார்.
பூமி பூஜையில் கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மூத்தஉறுப்பினர்கள், பள்ளி பாளையம் பகுதி ஜவுளித் தொழில் அதிபர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



