சென்னையிலுள்ள ஆகாஷ் பைஜுவில் பயின்ற மாணவர் கள், கௌரவமிக்க தேசிய நுழை வுத்தேர்வு (நீட்) யுஜி 2022ல் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்றனர்.
அகில இந்திய தரவரிசை யில் முதன்மையான 200 இடங்களில், 126-வது இடத்தை பி.ஹரிணியும், 150-வது இடத்தை ரினீத் ரவிச்சந்திரனும் பெற்றுள்ளனர்.
உலகளவில் மிகக்கடுமையான நுழைவுத்தேர்வாக கருதப்ப டும் நீட்- ல் வெற்றிகாண இரண்டு ஆண்டுகள் நடைபெறும் வகுப்பறை கல்வித்திட்டத்திற்காக இம்மாணவர்கள் ஆகாஷ் பைஜுவில் சேர்ந்திருந்தனர்.
“ஆகாஷ் பைஜு வழங்கிய சிறப்பான பாடத்திட்டம் மற்றும் பயிற்சியளிப்பு இல்லை யெனில், குறைந்த கால அளவிற்குள் வெவ்வேறு பாடங்களில் பல கருத்தாக்கங்களை புரிந்து கொண்டிருக்க முடியாது” என்று வெற்றி பெற்றவர்கள் கூறினர்.
ஆகாஷ் பைஜுவின் மேலாண்மை இயக்குனர் ஆகாஷ் சௌத்ரி கூறியதாவது:
நீட் 2022 தேர்வில், மொத் தத்தில் 16 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த மாணவர்களது சாதனையானது, அவர்களது கடும் உழைப்பின் அளவையும், அர்ப்பணிப்பு உணர்வையும், அத்துடன் அவர்களது பெற்றோரின் ஆதரவையும் நேர்த்தியாக சுட்டிக்காட்டுகிறது.
எதிர் காலத்தில் இவர்களது கல்வி சார்ந்த சிறப்பான முயற்சிகள் வெற்றிகாண நாங்கள் இவர்களை வாழ்த்துகிறோம். மாணவர்களுக்கு எப் போதும் சேவை கிடைக்கப்பெறுவதற்காக டிஜிட்டல் செயலிருப்பை நாங்கள் உயர்த்தினோம். பாட பகுதிகளையும் மற்றும் வினா வங்கிகளையும் ஆன் லைனில் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தோம்.
தேர்வுக்கான தயாரிப்பு மீது மெய்நிகர் முறையில் பல உத்வேகமளிக்கும் அமர்வு களையும், கருத்தரங்குகளையும் நடத்தியதோடு, நேர மேலாண்மைக்கான திறன்களையும் கற்பித்தோம்.
இந்த முயற்சிகள் பலனளித்திருப்பதை காண்பது திருப்தியளிக்கிறது. மாணவர்க ளுள் பலர், தாங்கள் விரும்பிய உயர்கல்வி திட்டத்தை மேற் கொள்ள முதன்மையான மருத்துவக்கல்லூரிகளில் சேர்க்கையைப் பெறுவதற்கு தகுதியுள்ளவர்களாக இருக்கின்றனர் என்றார்.
அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் மருத்துவம் (MBBS),, பல் மருத்துவம் (BDS), ஆயுஷ் (BAMS, BUMS, BHMS போன்ற) இளங்கலை (யுஜி) கல்வித் திட்டங்களைப் பயில விரும்பும் மாணவர்களுக்கு தகுதி பெறுவதற்கான தேர்வாக தேசிய முகவாண்மையால் நீட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படு கிறது.
வெளி நாடுகளில் ஆரம்ப நிலை மருத்துவ கல்வி நிலையை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களும் நீட் தேர்வை எழுதுவது அவசியமாகும்.



