fbpx
Homeபிற செய்திகள்நோய் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்குவதாக டாபர் வீட்டா அறிவிப்பு

நோய் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்குவதாக டாபர் வீட்டா அறிவிப்பு

பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, புதிய கல்வி அமர்வு தொடங்கும் நிலை யில், ஹவுஸ் ஆஃப் டாபரின் முன்னணி சுகாதார உணவு பானமான டாபர் வீட்டா, வலுவான நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கியத்துவத்தைப் பற்றி குழந்தை களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மெகா நோயெதிர்ப்பு விழிப்புணர்வு பிரச் சாரத்தைத் தொடங்குவதாக அறிவித்தது.

சென்னையில் கவுல் பஜாரில் உள்ள 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்ற சிறப்பு அமர்வுடன் இந்த இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது. குழந்தைகளுக்கு அடிப்படை சுகாதார நடைமுறைகள் மற்றும் சத்தான உணவு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து கற்பிக்கப்பட்டது.

இந்த மாணவர்களுக்கு சிறப்பு நோய் எதிர்ப்பு சக்தி கிட், டாபர் வீட்டாவும் வழங்கப்பட் டது. நிகழ்ச்சியில் டாபர் இந்தியா லிமிடெட் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் மேலாளர் தினேஷ் குமார் பேசியதாவது:

நேரடி வகுப்புகள் தொடங்கியதில் இருந்து, ஒவ்வொரு குழந்தைக்கும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி முதன்மைத் தேவையாகும். ஏனெனில் நாம் இன்னும் தொற்றுநோயிலிருந்து வெளியேறவில்லை.

தொற்றுநோய்களின் போது ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை வலுப்ப டுத்துவதில் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவம் மற்றும் வைரஸை எதிர்த்துப் போராடுவதில் அதன் முக்கிய பங்கு உலகளவில் நன்கு நிறுவப்பட்டுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, டாபர் வீட்டா, இந்தியாவின் 12 நகரங்களைச் சேர்ந்த முன்னணி அரசு சாரா நிறுவனங்கள்/பள்ளிகளுடன், அதாவது கொல்கத்தா, புனே, மும்பை, சென்னை, கோவை, வாரணாசி, லக்னோ, சண்டிகர், கான்பூர், அகமதாபாத், அவுரங் காபாத் மற்றும் பாட்னா நகரங்களில் நோய்களுக்கு எதிராக போராடுவதற்கு வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குவதற்கு கைகோர்த்துள்ளது என்றார்.

டாக்டர் டி.ஆர்.உதயகுமார் கூறுகை யில், “தினசரி, நாம் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு ஆளாகி றோம். நமது நோயெதிர்ப்பு அமைப்பு இந்த தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் மற்றும் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது பொதுவான பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு சிறந்த வழியாகும்.

இந்த முன்முயற்சியின் மூலம், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கருவிகளை வழங்குவதைத் தவிர, வலுவான நோய் எதிர்ப்புச்சக்தியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img