அருந்ததியர் சமூக அறக்கட்டளை சார்பில் பொதுக்குழுக் கூட்டம் அருந்தியர் சமூக அறக்கட்டளைக்கு சொந்தமான கோவை பேரூர் ரோட்டில் அமைந்துள்ள அரங்கில் நேற்று நடைபெற்றது. அறங்காவல் குழு செயலாளர் ஆறுமுகம் வரவேற்றுப் பேசினார்.
அறங்காவலர் குழுத் தலைவர் வெள்ளிங்கிரி தலைமை தாங்கி பேசினார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அப்பி மயில்சாமி, வழக்கறிஞர் சண்முகம், கோல்டன் பொன்னுசாமி, திருமலைசாமி, ராமநாதன், என்.கோபால், பி நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் ஆர். அதியமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பேராசிரியர் எஸ்.காந்திமதி, செந்தில்குமார், நல்லா சிரியா விருது பெற்ற எஸ் இந்திராகாந்தி சௌந்தரராஜன், தேசிய இளைஞர் விருது பெற்ற தமிழ்நாடு அரசு தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர் எஸ்.செல்வகுமார் மற்றும் திருப்பூர் பத்திரன்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் அக்ரி அலுவலக கண்காணிப்பாளர் சி.சுந்தர் நன்றி கூறினார்.நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு அரசுதூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர் எஸ்.செல்வகுமார் பேசும்போது தமிழக அரசு கல்வி உதவித்தொகை பெற எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு ரூ.2.5 லட்சத்திலிருந்து 8 லட்சமாக உயர்த்தியமைக்கு நன்றி தெரிவித்தார்.



