fbpx
Homeபிற செய்திகள்அதானி மாலை நேர கல்வித் திட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல்

அதானி மாலை நேர கல்வித் திட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல்

திருவள்ளூர் மாவட்டத்தில், காட்டுப்பள்ளி துறைமுகத்தைச் சுற்றி அமைந்துள்ள பஞ்சாயத்து கிராமங்களில் அதானி ஈவ்னிங் எஜுகேஷன் புரோகிராம் என்ற பெயரில் அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி பயிற்சியினை அதானி குழுமம் வழங்கி வருகிறது.

மாலை நேரத்தில், வசதியற்ற பின்னணிகளைக் கொண்ட, அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்க ளுக்கு கூடுதல் கற்பித்தலை வழங்கி வரும் இத்திட்டத்தின் மூலம் அரசின் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் இதில் பயிற்சி பெற்ற கிராமப்புற மாணவர்கள் நல்ல முன் னேற்றத்தைக் கண்டிருக்கின்றனர்.

அதானி மாலை நேர கல்வி மைய (AEEC) வகுப்புகளில் பங்கேற்ற தன் மூலம் இம்மாணவர்கள் சமீபத்தில் வெளியான அரசு பொதுத் தேர்வுகளில் சாதித்திருக்கின்றனர். காட்டுப்பள்ளியைச் சேர்ந்த எஸ். மனு குமார் 500-க்கு 415 மதிப்பெண்களுடன், காட்டுப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில், அதிக மதிப்பெண் பெற்ற முதல் மாணவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.

357 மதிப்பெண்களுடன் பி. கண்ணன் இரண்டாம் இடமும், 330 மதிப்பெண்களுடன் எஸ்.தேஜஸ் மூன்றாமிடமும் பிடித்திருக்கின்றனர்.
மாணவர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி, இலவசமாக வழங்கப்படும் ஒரு கல்வி சேவையாக அதானி மாலைநேர கல்வி செயல்திட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வகுப்புகளில் ஆர்வத்தோடு பங்கேற்கின்ற மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இதில் கற்பிக்கும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடும், ஆர்வத்தோடும் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றனர்.

அதானி ஃபவுண்டேஷன், அதன் காட்டுப்பள்ளி துறைமுக நிர்வாகக்குழுவின் வழியாக, தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தின் மீஞ்சூர் வட்டத்தில் அமைந்துள்ள காட்டுப்பள்ளி, பழவேற்காடு, தாங்கல் பெரும்புலம், கோட்டைக்குப்பம், லைட் ஹவுஸ், வாயலூர், காட்டூர், திருவெள்ளைவாயல் மற்றும் நெய்தவாயல் பஞ்சாயத்துகள் என்ற பதினொரு அமைவிடங்களில் மாலை நேர கல்வி மையம் (EEC)
என்பதனை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் மொத்தம் 310 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட கிணிணிசி செயல்திட்டம், 6-ம் வகுப்பிலிருந்து, 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஆங்கிலம், கணிதம் ஆகிய இரு பாடங்களில் பயிற்சியளிக்க சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. எனினும், பிற பாடத்திட்டங்களிலும் இம்மாணவர்களுக்கு கற்றலில் உதவி வழங்கப்படுகிறது.

ஒரு வாரத்தில் 6 நாட்களுக்கு தினமும் மாலை 5 மணியிலிருந்து, 7 மணி வரை இந்த வகுப்புகள் தவறாமல் நடத்தப்படுகின்றன. இந்த வகுப்புகளை நடத்துவதற்கான அமைவிட வசதியை பஞ்சாயத்து நிர்வாகங்கள் வழங்கி வருகின்றன.

AEEC செயல்திட்டம் என்பது, அதானி ஃபவுண்டேஷனின் நிறுவன சமூக பொறுப்புறுதி ((CSR)
) திட்டத்தின் அங்கமாக மேற்கொள்ளப்படுகிறது. 11 பஞ்சாயத்துகளைச் சேர்ந்த 71 கிராமங்களில் சமூக முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள் மீது இது கவனம் செலுத்தி வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img