fbpx
Homeபிற செய்திகள்அடுத்தமாதம் திருமணம்: கோவையில் ரயில் மோதி வழக்கறிஞர் பரிதாப சாவு

அடுத்தமாதம் திருமணம்: கோவையில் ரயில் மோதி வழக்கறிஞர் பரிதாப சாவு

கோவை பீளமேடு அடுத்த விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி என்பவரின் மகன் திலீபன்(29). வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக அவர் பத்திரிக்கை கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை பீளமேடு அடுத்த தண்ணீர்பந்தல் பகுதியில் சென்று கொண்டு இருந்தார் . அப்போது இயற்கை உபாதையை கழிப்பதற்காக ரயில் தண்டவாளத்தை திலீபன் கடந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில் திலீபன் மீது வேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி திலீபன் பலியானார்.

இதுபற்றி தகவல் அறிந்த ரயில்வே இருப்புப் பாதை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் .

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் வழக்கறிஞர் மோதி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img