fbpx
Homeபிற செய்திகள்பட்ஜெட் சாதிப்பாரா நிர்மலா சீத்தாராமன்?

பட்ஜெட் சாதிப்பாரா நிர்மலா சீத்தாராமன்?

நாட்டு மக்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள 2024 & 2025-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட், ஜூலை 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இது பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சிக் காலத்தின் முதல் பட்ஜெட் ஆகும்.


 இந்த முறை பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள் முன்னேற்றம் மற்றும் வேளாண்மை துறை ஆகியவற்றுக்கு இலக்கு வைத்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் சீர்திருத்த நடவடிக்கைகள் பட்ஜெட்டில் இடம்பெறப்போகிறது.


 மேலும் பட்ஜெட்டில் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, வருமானம் சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்படலாம், வரி நடவடிக்கைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டங்கள், குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினரை இலக்காகக் கொண்டு இருக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.  
 தொழில் துறையினர், வர்த்தகர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், முதியோர் என பல தரப்பினரும் பட்ஜெட்டில் தங்களுக்கு சாதகமான அறிவிப்பு வெளியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.


 நிர்மலா சீத்தாராமன் தொடர்ந்து ஏழாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். இதன் மூலம் அவர், முன்னாள் பிரதமரும் நிதி அமைச்சருமான மறைந்த மொரார்ஜி தேசாய் வைத்திருந்த ஆறு பட்ஜெட் தாக்கல் சாதனையை முறியடிக்கப் போகிறார்.
 அனைத்து தரப்பு மக்களின் நலன்களை பூர்த்தி செய்யும் அருமையான பட்ஜெட் என்ற பாராட்டைப் பெறுவதே மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் சாதனையாக இருக்க வேண்டும்; அந்த சாதனை பட்ஜெட்டைப் பாராட்ட நம்பிக்கையுடன் காத்திருப்போம்!

படிக்க வேண்டும்

spot_img