fbpx
Homeபிற செய்திகள்இந்தியாவில் கல்விக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கும் மத்திய, மாநில அரசுகள்திருவண்ணாமலை விழாவில் விஐடி பல்கலை....

இந்தியாவில் கல்விக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கும் மத்திய, மாநில அரசுகள்திருவண்ணாமலை விழாவில் விஐடி பல்கலை. வேந்தர் கோ.விஸ்வநாதன் பேச்சு

திருவண்ணாமலையில் ஒரு தனியார் திருமண மகாலில் அனைவருக்கும் உயர் கல்வி அறக் கட்டளை சார்பில் அனைவருக்கும் உயர் கல்வி திட்டம் அறிமுக விழா மற்றும் அனைத்து மேல் நிலைப்பள்ளிகள் உயர்கல்வி நிறுவனங்கள் அமைப்புகள் மற்றும் சங்கங்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
இந்த அறிமுகவிழாவுக்கு விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். அறக் கட்டளை உறுப் பினர் ருக்ஜீ கே.ராஜேஷ் குமார் அனைவரையும் வரவேற்றார். இந்த விழாவில் அறக்கட்டளை செய்திமடலை வேந்தர் கோ.விஸ்வநாதன் வெளியிட மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண் டியன் பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவில் விஐடி பல்கலைக் கழக வேந்தர் கோ. விஸ்வநாதன் பேசியதாவது: உயர்கல்வியில் இந்திய நாடு பின் தங்கியுள்ளது. 18 வயது முதல் 28 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் உயர் கல்வி பெற தகுதி பெற்றவர்கள் வளர்ந்துவரும் நாடுகளிளெல்லாம் 60 சதவிதம் முதல் 100சதவிதம் வரை உயர்கல்வி மாணவர்கள் பயின்றுள்ளனர்.

சீனாவில் 60 சதவிதமும் அமெரிக்காவில் 80 சதவிதமும் தென்கொரியா வில் 100 சதவிதமும் உயர் கல்வி மாணவர்கள் பெற் றுள்ளனர். சீனாவைவிட இந்திய மக்கள் தொகை அதிகம். ஆனால் பொருளாதாரத்தில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. கல்விக்காக சீனா அமெரிக்கா போன்ற நாடுகள் நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் கல்விக்கு நிதி ஒதுக்கீடு குறைவாக செய்துள்ளது. விழிப் புணர்வு இல்லாததால் மத்திய மாநில அரசுகள் குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்வதால் பொருளாதாரத்தில் நாடு உயர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் ஏழைகளுக்கு உயர் கல்வி எட்டாக்கனியாக உள்ளது. கல்வி பொருளாதாரத்தில் தமிழ் நாட்டில் பின் தங்கியுள்ளது வட மாவட்டங்கள் தான்.
எனவேதான் உயர்கல்வி பெற திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைவருக்கும் உயர்கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முன்னேற வேண்டுமென்றால் உயர் கல்வி மிகமிக முக்கியம் நல்ல அரசை தேர்ந்தெடுக்க கல்வி அறிவு வேண்டும். முழு மக்களாட்சி நிலவ விழிப்புணர்வு தேவை. உயர் கல்வியும் தேவை. எனவே அனைவரும் உயர்கல்வி பெறவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில் சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், கல்வி அறிவு எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அனை வருக்கும் உயர்கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கல்வி என்பது அறிவு மட்டுமல்ல, செயல்.

தான்பெற்ற கல்வியை அனைவருக்கும் கொடுக்க வேண் டும் என்ற செயலாக, இந்த திட் டம் திருவண்ணமலையில் அறிமுக விழாவாக நடக்கிறது, என்றார்.
அப்போது அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளைக்கு திரு வள்ளுவர் கல்வி அறக்கட்டளை சார்பில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ். எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் எஸ்கேபி கல்வி குழுமத்தின் சார்பில் கல்விகுழும தலைவர் கு.கருணாநிதி ரூ.3 லட் சத்திற்கான காசோலையினை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து விஐடி பல்கலைக்கழக துணை வேந்தர் ஜி.வி.செல்வம் அறக்கட்டளை செயலாளர் ஜே.லட்சுமணன், நிதி குழு தலைவர் எம்.வெங்கட சுப்பு முன்னாள் அமைச்சர்அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ண மூர்த்தி எம்எல்ஏ, எஸ்கேபி கல்வி குழுமத் தின் தலைவர் கு.கருணாநிதி மாவட்ட முதன் மைக்கல்வி அலுவலர் சி.சுவாமி முத்தழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங் கினர்.
இந்த நிகழ்ச்சியை தமிழ் இயக் கம் மாநில செயலாளர் பொற்கோ மு.சுகுமார் தொகுத்து வழங்கினார். முடிவில் அறக்கட்டளை உதவி திட்ட இயக்குநர் ப.சுந்தர் ராஜ் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img