fbpx
Homeபிற செய்திகள்தொமுச தொழிற்சங்க கலைஞரகம் கட்டிடம்: மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்

தொமுச தொழிற்சங்க கலைஞரகம் கட்டிடம்: மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்

தூத்துக்குடி அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் அரசு விரைவு போக்கு வரத்து கழக பணிமனையில் தொமுச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம் எம்பி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் வழிகாட்டுதலின்படி கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தொமுச தொழிற்சங்க கலைஞரகம் கட்டிடத்தை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக தூத்துக்குடி பணி மனை தலைவர் மரிய செல்வம் தலைமை தாங்கினார், தொமுச பேரவை செயளாலர் தர்மன், மாவட்ட கவுன்சில் தலைவர் முருகன், மத்திய சங்க தலை வர் வைத்தியநாதன் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது: கழக அரசு 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த நிலையில் கொரோனா பேரிடர் காலத்தில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர், தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு மிகச் சிறப்பாக செயலாற்றி கொரோனா பேரிடரிலிருந்து மக்களையும், அரசுத்து றைகளையும் மீட்டது.

அரசு போக்குவரத்து தொழிலாளர்களும் மிகுந்த பாதிப்பு அடைந்த போதிலும் லாப நோக்க மில்லாமல் சேவை மனப்பான்மையுடன் மக்கள்பணி செய்தனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அண்ணா பேருந்து நிலையம் சிறப்பாக கட்டப்பட்டு அமைச்சர்கள், எம்பி ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

அதுபோல புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நான்கு மாடியுடன் லிஃப்ட் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

இரவு பகல் பாராது கண் விழித்து உழைத்துக் கொண்டிருக்கிற அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் வசதிக்காக புதிய பணிமனையில் ஓய்வறைகள் சிறப்பாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பணிமனை வாயிலில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் போக்குவரத்து கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மத்திய சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் மத்திய சங்க பொருளாளர் கருணாநிதி துணைப் பொருளாளர் இளங்கோ, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் செயலாளர்கள் மரியதாஸ், சந்திரசேகரன் மற்றும் தொமுச விரைவு போக்குவரத்து கழகம் சங்க தலைவர் மரிய செல்வம், செயலாளர் தங்கப்பெருமாள், பொருளாளர் வடிவேல் முருகன், உறுப்பினர்கள் ராஜேந்திரன், தங்க வேலு, செயற்குழு உறுப்பினர்கள் ஈஸ்வரன், தாமஸ், சுரேந்திரன், திருவள்ளுவர் கூட்டுறவு பணியாளர் சங்க தலைவர் துரை, செயலாளர் ஜெய்சங்கர், துணைத் தலைவர் குமார வேல், செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img