தூத்துக்குடி சர்வ தேச சரக்குபெட்டக முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தல் மற்றும் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் பல்வேறு திட்டங்களின் தொடக்கம், அடிக்கல் நாட்டுதல், பணிகளைத் தொடங்குதல் மற்றும் நில ஒப்பந்தங்கள் கையெழுத்திடுதல் ஆகியற் றின் தொடக்க விழா துறைமுக சரக்குத்தளத்தில் நடைபெற்றது.
இதில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து & நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால், ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கொடி அசைத்து திட்டங்களைத் தொடங்கி வைத்தனர்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையம் தலைவர் சுசாந்த குமார் புரோஹித், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து & நீர்வழிகள் துறை அமைச்சக செயலாளர் தா.கி.ராமச் சந்திரன், தூத் துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் இரா.ஐஸ்வர்யா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



