Homeபிற செய்திகள்திருச்சி மாவட்டம் முடிகண்டம் கிராம பஞ்சாயத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடத்திய ஜன்சுரக்ஷா பிரசார முகாம்...

திருச்சி மாவட்டம் முடிகண்டம் கிராம பஞ்சாயத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடத்திய ஜன்சுரக்ஷா பிரசார முகாம் – பயனடைந்த வாடிக்கையாளர்கள்: ரிசர்வ் வங்கி முதன்மைப் பொது மேலாளர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா துவக்கிவைத்தார்

ஜூலை 1 முதல் செப்டம்பர் 30, 2025 வரை தேசிய அளவில் ஜன்சுரக்ஷா நிரவல் பிரச்சாரம் நடந்து வருகிறது. ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டம் மணிகண்டம் வட்டாரம் முடிகண்டம் கிராம பஞ்சாயத்தில் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நிதி உள்ளீட்டு நிரவல் முகாமை (Financial Inclusion Saturation Camp) நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தியது.

இந்த முகாமை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்திய ரிசர்வ் வங்கியின் முதன்மைப் பொது மேலாளர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் ஜி.ஸ்ரீராம், இந்திய ரிசர்வ் வங்கியின் உதவிப் பொது மேலாளர் அன்பரசு, நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் மோகன் கார்த்திக், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள், பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முகாமில், பிரதம மந்திரியின் PMSBY/PMJJBY/APY ஆகிய திட்டங்களுக்கான பதிவு கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் வாடிக்கையாளர்களுக்கு நேரடி மறு-பதிவு வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.

இந்த பிரசாரம் பெருநிதி உள்ளீட்டுக்கான பரந்த வரையறைகள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வெளிச்சமிட்டு அனைவரையும் கவருவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இதில் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) திட்டத்தின் கீழ் கணக்கு திறப்பு, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY), பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) மற்றும் அடல் ஓய்வூதிய யோஜனா (APY) ஆகியவற்றிற்கான கணக்கு பதிவுகளும் அடங்கும்.

இந்த பிரச்சாரம் REKYC பற்றியும் செயலற்ற றிவியிஞிசீ கணக்குகளை மீண்டும் செயல்படுத்துதல் மற்றும் வைப்பு கணக்குகளில் நிலுவையில் உள்ள நியமன விவரங்களை புதுப்பித்தல் மற்றும் தீவிர நிதி அறிவுசார் அமர்வுகளை வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

இத்தகைய அமர்வுகள் சைபர் மற்றும் டிஜிட்டல் குற்றங்களைத் தடுக்கும் விழிப்புணர்வு, இந்திய ரிசர்வ் வங்கிக்கு (RBI) மாற்றப்பட்ட உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகளை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் வங்கி குறைதீர்ப்பாளரின் பங்கு மற்றும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

இந்த முகாமில் பல்வேறு வங்கிகளின் அலுவலர்கள், வணிகப் பிரதிநிதிகள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதே போல திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டாரம் கோவத்தகுடி கிராம பஞ்சாயத்திலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் நிதி உள்ளீட்டு நிரவல் முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்தது.

படிக்க வேண்டும்

spot_img