fbpx
Homeபிற செய்திகள்குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா இடையாற்றுமங்கலம் கிராமத்தில் “குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்“ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .

“லால்குடி வட்ட சட்டப்பணிகள்குழு” சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு இக்குழுத் தலைவரும், சார்பு நீதிபதி யுமான நீதிபதி எஸ்.விஜயகுமார் தலைமை வகித்து பேசினார்.முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ்.ராஜ்குமார் ,கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி எம்.அபிநயா ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

“ஆல் தி சில்ரன்”

இடையாற்று மங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.செல்வக்குமார், லால்குடி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கே.எஸ்.எஸ்.ஜே.கென்னடி, செயலாளர் திரு மங்கலம் பி.மாரிமுத்து லால்குடி வட்ட சட்டப்பணிகள்குழு பட்டியல் வழக்கறிஞர்கள் சிறுகாம்பூர் எஸ்.ஆர்.செந்தில் குமார், வி.பாண்டி யராஜன், பூவாளூர்முத்து, மணக்கால் அகிலாண்டேஸ்வரி ஆகியோர் பேசினர்.
ஞானசெல்வம் நன்றி கூறினார்.

“ஆல் தி சில்ரன்” தன்னார்வ தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார், சட்ட தன்னார்வலர் பன்னீர்செல்வம் , இடையாற்றுமங்கலம் ஊராட்சி செயலாளர் இந்திராணி ஆகி யோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img