சிறுதானிய பயிர்களுக்கான பன்னாட்டு கருத்தரங்கம் கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் கடந்த 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சிறு தானிய பயிர்களின் ஆராய்ச்சி தொடங்கி 100 ஆண்டு காலம் நிறைவு பெறுவதையும், சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023 கொண்டாடுவதையும்யொட்டி, கருத்தரங்கு நடந்தது.
கருத்தரங்கின் ஓர் அங்கமாக உழவர் உற்பத்தியாளர்கள் கம்பெனியின் செயல்பாடு எவ்வாறு சிறப்பாக செயல்பட செய்வது என்பதை பற்றிய கலந்துரையாடல் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலை மையில் நேற்று (மே 26) நடந்தது.
உழவர் உற்பத்தியாளர்கள் கம்பெனிகளின் உறுப்பினர்களிடம் கலந்துரையாடி அவர்களின் தேவைகளை ஆளுநர் கேட்டறிந்தார். மத்திய அரசின் தொலை நோக்கு திட்டங்கள் மற்றும் வேளாண் உத்திகளின் முக்கியம் சங்களை பற்றி உழவர்களிடம் தெரிவித்தார்.
50 சதவீதத்திற்கு மேல் வேளாண்மையை தொழிலாக சார்ந்துள்ள நம் நாட்டில், வேளாண் பொருளாதாரத்தை உயர்த்தினால் மட்டுமே இந்தி யாவை மேலும் வளம்பெற நாடாக மாற்ற முடியும். உழ வர்களின் வருமானத்தை இரட்டிப்பு செய்ய மத்திய அரசு செயல்படுத்தும் ஏழு அம்ச உத்திகள் மற்றும் வேளாண்மை 4.0 கொள்கைகளை பற்றி உழவர்களிடையே ஆளுநர் கலந்துரையாடினார்.
உழவர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்ய மத்திய அரசு தற்பொழுது உழவர் உற்பத்தியாளர்கள் கம்பெனிகளை நாடு முழுவதும் உழவர்களின் துணைவோடு உருவாக்கி வருகிறது. இந்த அமைப்பை விவசாய பெருமக்கள் நல்வழியில் பயன்படுத்தி சந்தைசார்ந்த வேளாண் உத்திகளை கடைப்பிடித்து உழவர்களின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும்.
உழவர்களுக்கு வேளாண் பொருட்களை எவ்வாறு இலாபகரமாக சந்தைப்படுத் துதல் மற்றும் தரமான வேளாண் இடுபொருட்கள் தேவை நேரத்தில் பெறுவது ஆகியவற்றில் சற்று சிரமம் உள்ளதாக உழவர்கள் தெரிவித்தனர்.
உழவர் உற்பத்தியாளர்கள் கம்பெனியை எவ்வாறு வெற்றிகரமான அமைப்பாக செயல்படுத்துவது, அதற்கான வெற்றியின் உத்திகளை பற்றி உழவர்களிடையே உரையாடினார்.
உழவர் உற்பத்தியாளர்கள் கம்பெனிகள் வெற்றி பெற தலைமை பண்பு, செயல் திட்டங்களை சுதந்திரமாக செயல்படுத்துதல், வேளாண் விநியோக சங்கிலி மேலாண்மை, உறுப்பினர்களிடையே ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு, கம்பெனி சட்டங்களை சரியாக புரிந்து கொண்டு கடை பிடித்தல், நேர்மை, வரவு செலவு கணக்கு முறைகள், சரியான வணிக திட்டம் தீட்டுதல், பேரம் பேசும் திறன் போன்றவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட் டிலுள்ள 120 உழவர் உற் பத்தியாளர்கள் கம்பெனியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து அவர்களுக்கு வேளாண் மற்றும் வேளாண் வணிக உத்திகளை பற்றிய ஆலோசனை வழங்கும் முயற்சிக்கு ஆளுநர் பாராட்டு தெரிவித்தார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
10 உழவர் உற்பத்தியாளர்கள் கம்பெனிகளுடன் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்க ழகம், ஆளுநர் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
கருத்தரங்கில் மற்றொரு அங்கமாக சிறுதானிய தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்பூட்டப்ட்ட பொருட்க ளின் கருத்துக்காட்சி மற்றும் விற்பனை அரங்கத்தை ஆளுநர் பார்வையிட்டார்.
வேளாண்மைப் பல்கலை. துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி, வேளாண் பல்கலைக்கழகத்தில் கடந்த ஓராண்டாக எடுக்கப்ட்ட சீரிய முயற்சிகள் மற்றும் சிறுதானிய பயிர்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை பெருக்க கடந்த 100 ஆண்டாக எடுக் கப்ட்ட முயற்சிகளை பற்றி விளக்கினார். ஆராய்ச்சி இயக்குநர் மு.ரவீந்திரன் நன்றி கூறினார்.
முன்னோடி உழவர்கள், உழவர்கள் உற்பத்தியாளர்கள் கம்பெனியின் உறுப்பினர்கள், தொழில்முனைவோர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.



