fbpx
Homeபிற செய்திகள்செல்வப்பெருந்தகை தலைமையில் சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வுக்கூட்டம்

செல்வப்பெருந்தகை தலைமையில் சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வுக்கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது கணக்கு குழுவினர் நேற்று கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, உக்கடம் மேம்பால பணிகள்
உட்பட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் ஆய்வு குறித் தான கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை முன் னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்தும், வளர்ச்சி பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் முறையாக
பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள், எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், அதற்கான நிதி தேவைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆய்வு கூட்டத்தில் குழு உறுப்பினர்கள், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா உட்பட பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img