முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 1,081 பள்ளிகளில் தொடங்கப்பட்டு 75,482 பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்.
“படிப்பு ஒன்று தான் உங்களிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாத சொத்து” என்பதன் அடிப்படையில் அனைத்து மாணவர்களும் எந்த காரணத்தை கொண்டும் கல்வியில் இடைநிற்றல் கூடாது என்பதில் தமிழக அரசு மிக கவனமாக செயல்பட்டு வருகிறது.
அனைத்து மாணவர்களுக்கும் கல்வி எளிதில் கிடைக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் மாணவர்களுக்கென பல்வேறு திட்டங்களை வகுத்து அதனை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்.
நகரப் பகுதி மற்றும் கிராம பகுதிகளில் பள்ளிக்குச் செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதாலும், பள்ளிகள் மிக தூரமாக இருப்பதாலும், சிலருடைய குடும்ப சூழலும் காரணமாகவும் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவதில்லை என்பதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
இன்றைய குழந்தைகள்தான் நாளைய எதிர்கால சமுதாயம் என்பதை அறிந்து, அவர்களுக்கு கல்வி அளிக்கவும், பசியின்றி கல்வி கற்கவும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு வரும்போது காலை உணவு சாப்பிடாமல் வருகின்றனர் என்பதை அறிந்து அவர்களின் வயிற்றுப்பசியை நீக்க இத்திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது:
சிறப்பு திட்டங்களில் ஒன்றான 1 முதல் 5 -ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் திருப்பூர் மாவட்டத்தில் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 77 அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் செயல் படுத்தப்பட்டு இதன் மூலம் 1429 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்பதால், பள்ளிகள் மிகத் தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்ப சூழலும் இதற்குக் காரணமாக இருக்கிறது.
பள்ளிக்கு வந்த பின் உணவு அருந்தி விட்டு கல்வியை கற்கும் மாணவர்களுக்கு தெளிவான கல்வியை கொடுக்க முடியும். தாய்க் கும் பணிசுமை குறையும், இதனை மனதில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் குழந் தைகளின் எதிர்காலத்திற்கான ஒரு முதலீடாக உள்ளது. இங்கு கற் கும் கல்விதான் உயர் கல்விக்கு வழிவகுக்கும்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி 1 முதல் 5 -ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நாகபட்டினம் மாவட்டம், திருக்குவளையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மாணவராக இருந்த பள்ளியில் இரண்டாம் கட்டமாக தொடங்கி வைத்தார் முதல்வர்.
அதனைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளில் விரிவாகம் செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் முதல மைச்சரின் காலை உணவுத் திட்டம் இரண்டாம் கட்டமாக 251 கிராம ஊராட்சிகளில் 797 பள்ளிகளில் பயிலும் 37,018 மாணவ, மாணவியர்களுக்கும், 14 பேரூராட் சிகளில் 95 பள்ளிகளில் பயிலும் 4,555 மாணவ, மாணவியர்களுக்கும், 6 நகராட்சிகளில் 59 பள்ளிகளில்பயிலும் 5,648 மாணவ, மாணவியர்களுக்கும் நகராட்சி centralised kitchen மூலம் இரண்டு பேரூராட்சிகளுக்குட்பட்ட 10 பள்ளிகளில் பயிலும் 784 மாணவ, மாணவியர்களுக்கும் மற்றும் மாநகராட்சியில் உள்ள 120 பள்ளிகளில் பயிலும் 27,477 மாணவ, மாணவியர்களுக்கும் என மொத்தம் 1,081 பள்ளிகளில் தொடங்கப்பட்டு 75,482 பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.
இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் 1,157 பள்ளிகளில் பயிலும் 76,911 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின் றனர். முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் பள்ளி மாணவ – மாணவியர்களுக்கு திங்கள்கிழமை உப்புமா – காய்கறி சாம்பாரும், செவ்வாய்கிழமை காய்கறி கிச்சடி- காய்கறி சாம்பாரும், புதன்கிழமை பொங்கல் – காய்கறி சாம்பாரும், வியாழக்கிழமை உப்புமா – காய்கறி சாம்பாரும், வெள்ளிக்கிழமை காய் கறி கிச்சடி – காய்கறிசாம்பாரும் வழங்கப்பட்டு வருகிறது என்றார் ஆட்சியர்.
முத்தூர் பேரூராட்சி பகுதியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் பயன்பெறும் குழந்தை யின் பெற்றோர் பாண்டீஸ்வரி தெரிவித்ததாவது:
கணவர் செந்தில்குமார். கட்டடத் தொழிலாளி. எங்களுக்கு மகன், மகள் உள்ளனர்.
மகன் (வயது 7) முத்தூர் பேரூராட்சி, சின்னமுத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். கணவர் காலையிலேயே பணிக்கு சென்று விடுவார். மகனுக்கு சிறுதானியங் களை உணவில் சேர்த்து கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய நெடுநாள் ஆசையாகும். வீடுகளில் சிறு தானிய உணவுகள் தயார் செய் யப்படுவதில்லை.
ஆனால் தமிழ்நாடு அரசு அதனை பொறுப்பெடுத்து காலை உணவு திட்டமாக கொண்டு வந்துள்ளது. எங்களுடைய குழந்தை களுக்கு கோதுமை தோசை போன்ற வற்றை தான் செய்து கொடுக்க முடியும்.
ஆனால் இந்த திட்டத்தின் கீழ் சாமை, கேழ்வரகு உள்ளிட்ட ஊட்டச்சத்து மிக்க உணவினை கொடுப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த திட்டத்தை துவங்கி வைத்த முதல் வருக்கு மனமார்ந்த நன்றி என்றார்.
தாராபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத் தில் பயன்பெறும் குழந் தையின் பெற்றோர் பஞ்சவர்ணம் தெரிவித்ததா வது:
கணவர் பால்ராஜ். கூலித்தொழிலாளி.
எங்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகள் (வயது 6) தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், அலங்கியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள். முதலமைச்சரின் சிறப்பு திட்டமான காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஏதுவாக உள்ளது.
தினமும் காலையில் இட்லி தோசை போன்ற உணவுகளுக்கு பதிலாக ஊட்டச்சத்து மிக்க சத்தான உணவுகளை வழங்கி வருகின்றனர். இது மாணவர்களுக்கு புத்துணர்ச்சியாகவும் மாணவர்கள் ஆர்வமுடன் படிக்கவும் நல்ல முறையில் அமைந்துள்ளது.
சிறுதானிய உணவுகளுடன் காய்கறிகள் உள்ளிட்டதை கொண்டு சமைத்து ஆரோக்கியமான உணவு வழங்கப் படுகிறது. பசியுடன் பள்ளிக்கு வரும் குழந்தைகள் பசியாறுவதுடன், ஆரோக்கியத்துடன் அறிவுப் பசியாற வழிவகை ஏற்பட்டுள்ளது. முதல்வருக்கு மனமார்ந்த நன்றி என்றார்.
தொகுப்பு:
செ.கு.சதீஸ்குமார்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
திருப்பூர் மாவட்டம்.