fbpx
Homeபிற செய்திகள்திருப்பூரில் திமுக நடத்திய சமத்துவ பொங்கல் விழா - எம்எல்ஏ பங்கேற்றார்

திருப்பூரில் திமுக நடத்திய சமத்துவ பொங்கல் விழா – எம்எல்ஏ பங்கேற்றார்

திருப்பூர் வடக்கு மாவட்டம் தெற்கு மாநகரம் 55வது வட்டக் கழகம் திமுக சார்பில் தமிழர் திருவிழா சமத்துவ பொங்கல் விழா, இ சேவை மையம் திறப்பு மற்றும் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.

திருப்பூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான க.செல்வராஜ் சிறப்புரை ஆற்றி விழாவினை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் வடக்கு மாநகர செயலாளர் மேயர் ந தினேஷ்குமார், தெற்கு மாநகரக் கழக செயலாளர் டி. கே.டி.மு.நாகராஜ், வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் நந்தினி, வடக்கு மாநகர அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வாலிபாளையம் பகுதி கழகச் செயலாளர் உசேன், கருவம்பாளையம் பகுதி கழக அவை தலைவர் தம்பி குமாரசாமி, மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், 55வது வட்டக் கழக செயலாளர் ஆதவன் முருகேசன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலைச்செல்வி, மாவட்ட மகளிர் அணி தொண்டர் அணி அமைப்பாளர் ஆனந்தி, பேச்சாளர் ரஜினி செந்தில், தெற்கு மாநகர மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மல்லிகா, வடக்கு மாநகர துணை கழக செயலாளர் தேவி முருகேசன், வட்டக் கழக பிரதிநிதி தமிழ்செல்வன். தெற்கு மாநகர நெசவாளர் அணி அமைப்பாளர் தம்பி சலீம். பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் அருண். ஜீவா 55 வது வட்டக் கழக இளைஞரணி அமைப்பாளர் ரத்தினமூர்த்தி .55 வது வட்ட‌ கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img