Homeபிற செய்திகள்தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பேச்சு

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பேச்சு

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில நடைபெற்றது. கமிஷனர் மாதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:- நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்று 100 சதவீதம் வெற்றி கண்டது. இதற்கு காரணமான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

‘தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் சிறப்பாக செயலாற்றி 2-வது முறையாக வெற்றி பெற்று பாராளுமன்ற குழு தலைவராக பொறுப்பேற்றுள்ள தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.க்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்.

தேர்தலுக்குப் பின் முதல்முறையாக மாநகராட்சி கூட்டம் இன்று கூடியுள்ளது, மாநகராட்சியில் மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் மற்றும் வடிகால் நிதி திட்டத்தின் ஈடுபாடு சார்ந்த நிர்வாக பணிகளுக்காக புதிய நிர்வாக அனுமதி அளித்தல், மாநகராட்சி பகுதிகளில் வரைபடங்களுக்கு மாறாக கட்டப்பட்டு வரும் அனுமதி அற்ற கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், வார்டுகளில் ஏற்பட்டு வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளவும் நியமிக்கப்பட்ட 5 நகர அமைப்பு தொழில்நுட்ப உதவியாளர்கள் பணிக்காலத்தை நீடித்தல், மாநகராட்சி பூங்கா மற்றும் பள்ளிகளை சிறப்பாக பராமரித்தல், மாநகராட்சி வணிக வளாகங்கள் வருவாயை அதிகரித்தல், தருவை ரோடு திரேஸ்புரம் கணேஷ் நகர் மற்றும் பாத்திமா நகர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு தற்காலிக பணியாளர்களை நியமித்தல், மாநகரம் முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரங்களை அதிக அளவில் வளர்த்து பராமரிக்க நடவடிக்கை எடுத்தல் உட்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி, கோட்டுராஜா, நிர்மல், பாலகுருசாமி, நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், கணக்கு குழு தலைவர் ரெங்க சாமி, பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ் குமார்,கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரிக்டா ஆர்தர் மச்சாது, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை, சந்திரபோஸ், வெற் றிச்செல்வன், ஜெயலட்சுமி சுடலைமணி, மந்திரமூர்த்தி உட்பட அனைத்து கவுன்சி லர்களும், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, அதிகாரிகள் ராஜாராம், சரவண கல்யாணசுந்தரம், சொர்ணலதா தினேஷ்குமார், ஹரிகணேஷ், ராஜபாண்டி, ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகர் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img