fbpx
Homeபிற செய்திகள்முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெந்தெகொஸ்தே திருச்சபை வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெந்தெகொஸ்தே திருச்சபை வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பெந்தெகொஸ்தே திருச்சபைகளின் கூட்டமைப்பின் பிரதம பேராயர் டாக்டர் டேவிட் பிரகாசம் மற்றும் அனைத்து பெந்தெகொஸ்தே சபை போதகர்களும் சேர்ந்து எழுதும் வாழ்த்துச் செய்தி:

பல ஆண்டு காலமாக சபைகள் நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியரிடமிருந்து தடையின்மைச் சான்று வாங்குவதில் பல இன்னல்களை சந்தித்து வந்தோம்.

தங்களுடைய ஆட்சிக் காலத்தில் 2025-ல் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்துக் கொண்டு, கிறிஸ்துவ மக்களுக்கு பல நலத் திட்டங்களை செய்துவருகிறீர்கள்.

இதுவரை கட்டப்பட்ட கட்டிடங்களுக்கும் இனிமேல் கட்டக் கூடிய கட்டடங்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அனுமதி தேவையில்லை என்று அறிவித்துள்ளீர்கள்.

இதனை கிறிஸ்துமஸ் பரிசாக எங்களுக்கு வழங்கியுள்ளீர்கள். மிகவும் மகிழ்ச்சி உண்டாக்குகிறது. அனைத்து கிறிஸ்துவ பெந்தெகொஸ்தே கூட்டமைப்பு சார்பாக உங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் ஆட்சி நீடித்து நடக்கவும் உங்கள் சரீர சுகத்துக்காகவும் அனுதினம் நாங்கள் பிராத்தனைச் செய்கிறோம். மீண்டும் ஒருமுறை அனைத்து கிறிஸ்துவ மக்கள் சார்பாக உங்களுக்கு மனமார்ந்த நன்றியையும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதை மாண்புமிகு முதலமைச்சரிடம் பரிந்துரை செய்த திருச்சி சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

படிக்க வேண்டும்

spot_img