தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் 2024ஆம் ஆண்டிற்கான ‘தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது 2024” ஒளிரும் ஈரோடு அமைப்புக்கு வழங்கப்பட்டது.
இதை சுதந்திர தின விழாவில் கலெக்டர் கந்தசாமி ஒளிரும் ஈரோடு அமைப்பு சேர்மன் சின்னசாமி, நிர்வாகிகள் தர்மராஜ், துரைசாமி, சண்முகசுந்தரம் வேல்முருகன் ஆகியோரிடம் வழங்கினார்.



