fbpx
Homeபிற செய்திகள்சுனிதி சாலமன் நினைவு ஆய்வு மையம் துவக்கம்

சுனிதி சாலமன் நினைவு ஆய்வு மையம் துவக்கம்

ஒய்ஆர் கைடோண்டே மருத்துவ கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஒரு அங்கமான ஒய்ஆர்ஜி கேர் சார்பில் சென்னையில் சுனிதி சாலமன் நினைவு கருத்தரங்கு நடைபெற்றது.

இந்த கருத்தரங்கு பத்மஸ்ரீ டாக்டர் சுனிதி சாலமனின் நீண்ட பாரம்பரியத்தையும், சுகாதாரப் பாதுகாப்பில் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புகளையும் கவுரவிக்கும் விதமாக நடத்தப்படுகிறது. இதில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் மருத்துவப் பள்ளி பேராசிரியரான டாக்டர் கிரிகோரி லூகாஸ் சிறப்புரை ஆற்றினார்.

மேலும் குப்தா-கிளின்ஸ்கி இந்தியா நிறுவனத்தின் இணை தலைவர் டாக்டர் அமிதா குப்தாவின் விளக்க காட்சிகள் இடம் பெற்றது. இதைத்தொடர்ந்து, கோவிட்-19 நமக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் குறித்த குழு விவாதம் நடைபெற்றது.

பின்னர் டாக்டர் சுனிதியின் நினைவாக சுனிதி சாலமன் மையம் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. இந்த ஆய்வகங்கள் வைரஸ் கண்டுபிடிப்புகள், பரிணாம வளர்ச்சி, எதிர்ப்பு மருந்து, வளர்ந்து வரும் மாறுபாடுகள் போன்ற ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளன.

படிக்க வேண்டும்

spot_img