fbpx
Homeபிற செய்திகள்ஒரேநாளில் 6000 மரங்களை நட்ட மாணவர்கள்

ஒரேநாளில் 6000 மரங்களை நட்ட மாணவர்கள்

மேட்டுப்பாளையம் அருகே சிக்காரம்பாளையம் கிராமத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் பசுமை வனம் என்ற தலைப்பில் ஒரே இடத்தில் 6000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டு மரங்களை நட்டனர்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அருகே உள்ள சிக்காரம்பாளையம் கிராமத்தில் காரமடை ரோட்டரி சங்கம் சார்பில் பசுமை வனம் என்ற தலைப்பில் சுமார் 6000 மரக்கன்றுகள் ஒரே இடத்தில் நடக்கூடிய நிகழ்ச்சி நடைபெற்றது.

சிக்காரம்பாளையம் ஊராட்சிமன்ற தலைவர் ஞானசேகரன் தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் மற்றும் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவியர் மற்றும் காரமடை ரோட்டரி சங்கம் நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு சுமார் 6000 மரக்கன்றுகளை ஒரே நேரத்தில் நடவு செய்தனர் வேம்பு, அரசன், புங்கன், பூவர சன், உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய மர வகைகளை ரோட்டரி சங்கத்தின் சார்பில் நடவு செய்யப்பட்டது. சுற்று சுழலை மேம்படுத்தும் முயற்சியாக பசுமை வனம் என்ற பெயரில் இந்த மரநடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக ரோட்டரி சங்கத்தினர் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், மாவட்ட ஆளுநர் சுரேஷ் பிரபு, வனக்கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன், காரமடை ரோட்டரி சங்க தலைவர் சோமசுந்தரம், செயலாளர் சரவணக்குமார், பொருளாளர் பழனிச்சாமி, காரமடை வனச்சரக அலுவலர் ரஞ்சித், மாவட்ட ஆளுநர் தேர்வு தனசேகர், மாவட்ட ஆளுநர் பரிந்துரைக்கப்பட்டவர் பூபதி, மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயராமன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராம், பிராந்திய ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ், துணை ஆளுநர் வேணுசங்கர், சிவசதீஷ் குமார், காரமடை, சிறுமுகை ரோட்டரி சங்க நிர்வாகிகள் பள்ளி மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img