fbpx
Homeபிற செய்திகள்ஸ்டார் ஹவுசிங் பைனான்ஸ் நிகர லாப நிதி அதிகரிப்பு

ஸ்டார் ஹவுசிங் பைனான்ஸ் நிகர லாப நிதி அதிகரிப்பு

ஸ்டார் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் 2022-23 நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், வரிக்குப் பிந்தைய லாபத்தில், ஆண்டுக்கு ஆண்டு 545 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் வருமானமும் 80 சதவீதம் அதிகரித்துள்ளது.

முதல் முறையாக ஒரு நிதியாண்டில் ரூ.100 கோடிக்கு மேல் கடன் வழங்கியுள்ளது. நிதி முடிவுகளுக்கு இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக நிறுவனத்தின் எம்டி ஆஷிஷ் ஜெயின் தெரிவித்தார்.

இந்நிறுவனம் நடப்பு நிதியாண்டில் ஒவ்வொரு காலாண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, முழு நிதியாண்டிலும் நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிறுவனம் கிளை வலையமைப்பை விரிவாக்குவதோடு தொழில்நுட்பம் மற்றும் களங்களில் முதலீடு செய்கிறது.

படிக்க வேண்டும்

spot_img