fbpx
Homeபிற செய்திகள்‘ஸ்போகோமி’ உலகக் கோப்பை: சென்னை அணி வீரர்கள் தகுதி

‘ஸ்போகோமி’ உலகக் கோப்பை: சென்னை அணி வீரர்கள் தகுதி

கடற்கரையில் குப்பை சேகரிப்புக்காக நடந்த பரபரப்பான போட்டியில் சென்னை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. வரும் நவம்பரில் ஜப்பானில் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது.
இந்தியாவின் முதல் கால நிலை -நடுநிலை விளை யாட்டான ‘ஸ்போகோமி’ உலகக் கோப்பைக்கான போட்டி சென்னை பெஸ்ஸி கடற்கரையில் நடந்தது.

தி நிப்பான் அறக் கட்டளையுடன் இணைந்து ViDHAI (மறுசுழற்சி) நிறுவனம் இதற்கான ஏற் பாடுகளை செய்திருந்தது.

‘ஸ்போகோமி’ – ஜப்பானில் உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டுப் போட்டி, குப்பை சேகரிப்பதை பரபரப்பான போட்டியாக மாற்றுவதுதான். வேடிக்கை, விநோதமான இதில் 3 பேர் கொண்ட குழுக்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. வயது பேதமின்றி அனைத்து தரப்பினரும் இதில் பல் குழுக்களாக பங்கேற்றனர். கடற்கரையை சுத்தப்படுத்தவும், சுகாதாரமான பகுதியாக மாற்றவும் நோக்கமாகக் கொண்டது இப்போட்டி.
பிரிக்கப்பட்ட குப்பையை 60 நிமிடங்களில் சேகரிக்க வேண்டும் என்பது இப்போட்டியின் விதி. குப்பை சேகரிப்பைப் பொறுத்து அணிகளுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டது.

இந்த வேடிக்கையான தனித்துவமான போட்டியில், சென்னை அணி 6500 புள்ளிகளைப் பெற்று இந்தியா தகுதிச் சுற்றில் வென்றது. இரண்டாவது இடம் பெற்ற அணி 2800 புள்ளிகளைப் பெற்றது. சுமார் 400 கிலோ பிரிக்கப்பட்ட குப்பையை 60 நிமிட பரபரப்பான சண்டையில் சேகரித்தனர்.

சென்னையைச் சேர்ந்த அம்ரித் ஏ, மதுசூதன் டி , ஷருண் ஏ ஆகியோர் இதில் வென்றனர்.

நவம்பரில் ஜப்பா னில் நடைபெறும் உலகக் கோப்பையில் இந்தியாவை இவர்கள் பிரதிநிதித் துவப்படுத்த உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img