கோவை கொடிசியா மைதானத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளருமான நா.கார்த்திக், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கூட்ட அரங்கிற்குள் வந்த உதயநிதி ஸ்டாலின் மேடைக்கு முன்பாக வைக்கப் பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் மேடையேறிய அவருக்கு கோவை மாநகர் மாவட்டம் சார்பில் செங்கோல் வழங்கப்பட்டது. மேலும் சேலத்தில் நடைபெற உள்ள இளைஞரணி மாநாட்டிற்கான நிதிக்கு முன்பணமாக கோவை மாநகர், வடக்கு மற்றும் தெற்கு என மூன்று மாவட்டங்கள் சார்பில் ஒன்றரை கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதே போல் நீட் தேர்வுக்கு எதிராக பெறபட்ட 2 லட்சத்து ஐந்தாயிரம் கடிதங் களை மூன்று மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர்.
தொடர்ந்து கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
சேலத்தில் நடைபெற உள்ள இரண்டாவது மாநில மாநாட்டிற்கு உங்களை அழைப்பதற்காக வந்துள்ளேன். கோவைக்கும் கழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கோவையில் கலைஞர் கால் படாத இடமே இல்லை.
இன்று மாநாட்டு நிதியாக 3 கோடியே 37 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே அதிக நிதி வழங்கியது கோவை மாவட்டம் தான்.
இந்தியாவில் எத்தனை யோ இயக்கங்கள் இருந்தாலும் 1980 ல் இளைஞர்களுக்காக அணி துவங்கப்பட்டது திமுகவில் தான். தேர்தலுக்கு முன்பாக இயக்கங்கள் நடத்தும் அது தேர்தலுக்காக தான். ஆனால் இளைஞர் களுக்காக தற்போது ஒரு வாய்ப்பை முதல்வர் கொடுத்திருக்கிறார் என்றால் அது உங்கள் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில் தான். அனைவரும் குடும்பத்துடன் வந்து மாநாட்டை வெற்றி பெற வைக்க வேண்டும்.
கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு மதுரையில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. அது எதற்காக நடத்தப்பட்டது என நடத்தியவர்களுக்கும் தெரியாது கலந்து கொண்டவர்களுக்கும் தெரியாது. மாநாட்டில் சாப்பாடு எப்படி இருந்தது எனதான் கேட்டார்கள். மாநாடு எப்படி நடத்தக்கூடாதோ அதற்கு எடுத்துக்காட்டாக அந்த மாநாடு நடத்தப்பட்டது. தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் மகளிருக்கு இலவச பேருந்து திட்டம், மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் போன்ற திட்டங்களையும் மகளிர் உரிமை தொகை திட்டம் போன்றவற்றையும் சிறப்பாக செயல்படுத்தி காட்டியவர் முதல்வர்.ஜெயலலிதா இருந்த வரை நீர் தேர்வு தமிழகத்திற்குள் வரவில்லை.
ஆனால் அடிமைகள் ஆட்சியில் நீட் தேர்வு பாஜக நிர்பந்தத்தால் வந்தது. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 22 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தமிழகத்திலிருந்து மத்திய அரசுக்கு வரித்தொகையாக கடந்த ஒன்பது ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கொடுத்து அதில் 2 லட்சம் மட்டுமே தமிழகத்திற்கு பெற்றுள்ளோம்.
ஆனால் உத்தரப் பிரதேசத்திற்கு ஒன்பது லட்சம் கோடி கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி ராஜஸ்தான் மத்திய பிரதேசத்தில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் என்னை பற்றி பேசுகிறார். அவருக்கு எங்கு சென்றாலும் என்னை பற்றிய நினைப்பு தான்.
தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது கலைஞர் குடும்பம் தான் என மோடி சொல்லுகிறார். ஆமாம் இங்கு உள்ளவர் அனைவருமே கலைஞர் குடும்பம் தான். மோடியால் வாழ்ந்துள்ளது அவரது நெருங்கிய நண்பரான அதானி. கடந்த 8 ஆண்டுகளில் ஒரு நிறுவனம் இப்படிப்பட்ட வளர்ச்சியை பெற்றது எப்படி என ஒரு அமெரிக்க ஆய்வு நிறுவனம் கேட்டுள்ளது.
இதேபோல் 9 ஆண்டுகளில் நடைபெற்ற ஊழல் பட்டியலை சி ஏ ஜி வெளியிட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழரை லட்சம் கோடி எங்கு சென்றது என தெரியவில்லை என்றும் ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க 250 கோடி செலவு செய்தது பாஜக அரசு.கடந்த சட்டமன்ற தேர்தலில் அடிமைகளான அதிமுக விரட்டிய நிலையில் பாராளுமன்ற தேர்தலில் அடிமைகளான அதிமுக வின் ஓனர்சை அடித்து விரட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.



