fbpx
Homeபிற செய்திகள்எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை 39-வது நிறுவனர் தின விழா

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை 39-வது நிறுவனர் தின விழா

கோவை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் 39-வது நிறுவனர் நாள் விழா, வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக் கட்டளையை கடந்த 1970-ம் ஆண்டு, மறைந்த எஸ்.என்.ரங்கசாமி நாயுடு உருவாக்கினார். இவ்வறக்கட்டளையின் கீழ் மருத்துவம், கல்லூரிகள் என 19 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதன் நிறுவனர் நாள் விழா நவ இந்தியா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள, எஸ்.என்.ஆர். கலையரங்கில் நடைபெற்றது. எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாரா யணசுவாமி தலைமை வகித்து பேசினார்.

அனைத்து பள்ளி மற்றும் கல்வி நிறுவன முதல்வர்கள் ஆண்டறிக்கை வாசித்தனர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்து வமனை மற்றும் கல்வி நிறு வனங்களில் பணியாற்றி 25 ஆண்டுகள் நிறைவு செய்த மருத்துவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் 29 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

சிறப்பு விருந்தினர் ‘தன்னம் பிக்கைப் பேச்சாளர்’ முனைவர் இ.சா. பர்வீன் சுல்தானா பேசியதாவது: சொல் மிகவும் சக்தி வாய்ந்தது. யாருடைய உதட்டில் ஒளிந்து கொண்டிருக்கும் சொல், நம்முடைய வாழ்க்கையை மாற் றும் என்று நம்மால் சொல்ல முடியாது.

ஏதாவது ஒரு சொல் நம்முடைய வாழ்க்கையை மாற்றி விடாதா? நாம் தயாராக இல்லாத காரணத்தால் அது புரிவதில்லை. நமக்கு முன் தான் சுற்றிக் கொண்டிருக்கும்.

யார் விழிப்புடன் இருக்கின்றனரோ? அவர்கள், அச் சொல்லை கையகப்படுத்திக் கொள்வார்கள். ஒருவர் சொல்லக்கூடிய சொல் எப்போது, நம் மனதில் தொட்டுக் கொண்டு நிற்கிறதோ, அச்சொல்லே மாற்றத்தை ஏற்படுத்தும்.

அறக் கட்டளை

1970-ம் ஆண்டு யாருடைய சொல்லில் இருந்து உருவானதோ, இந்த அறக் கட்டளை தற்போது விருட்சமாக வளர்ந்து காணப்படுகிறது. இறைவன் அருளின்றி இது சாத்தியமாகாது. அனைவரையும் சமமாகப் பாவிக்கும் நல்லெண்ணம், இந்நிறுவனத்தை இன்னும் பல தலைமுறைக்கும் நீடித்து நிற்கும்.

இளைய சமுதாயம் தடுமாறும் போதுதான், நம் முடைய முன்னோர்களின் அறமும், ஆலோசனைகளும் தேவைப்படுகிறது. சுய ஒழுக்கம், கட்டுப்பாடு, உத்வேகம் இருந்தால் தான் உயர்ந்த இலக்கை அடைய முடியும் என்றார்.

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், அறங்காவலர்கள் எஸ்.நரேந்திரன், வி.ராமகிருஷ்ணா, தலைமை செயல் அலுவலர் சி.வி.ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img