Homeபிற செய்திகள்கேஏஏஆர் டெக்னாலஜிஸ் சார்பில் சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

கேஏஏஆர் டெக்னாலஜிஸ் சார்பில் சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரியில் 2024-ம் கல்வியாண்டில் பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களுக்காக கேஏஏஆர் டெக்னாலஜிஸ் நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

எண்ணெய் மற்றும் எரிவாயு, போக்குவரத்து, கல்வி, வர்த்தகம், நுகர்பொருட்கள், சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளுக்கான எஸ்ஏபி சேவைகளை கேஏஏஆர் டெக்னாலஜிஸ் நிறுவனம் வழங்கி வருகிறது.

சிமாட்ஸ் என்ஜினிரியங் கல்லூரி மாணவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பு களை உருவாக்கும் வகையில் அதற்கு தேவையான திறன்களையும் அறிவையும் மாணவர்களுக்கு அளித்து, தொழில் வளர்ச்சிக்கு தனது பங்களிப்பை வழங்கி வருகிறது.

சிறப்பு பயிற்சி

போட்டிமிக்க பல்வேறு தொழில் துறைகளில் தங்கள் மாணவர்கள் நல்ல வேலைவாய்ப்பை பெறுவதற்காக சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரி இதுபோன்ற வேலை வாய்ப்பு பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட முகாமில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பயிற்சி பெற்றனர்.

தொழில் மற்றும் வேலை வாய்ப்பை கருத்தில் கொண்டு கல்வியுடன் புதுமையான கற்றல் அனுபவத்தை மாணவர்களுக்கு இக்கல்லூரி வழங்கி வருகிறது.

உலகளாவிய அளவில் அனைத்து துறைகளிலும் தங்கள் மாணவர்கள் சிறந்த விளங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சிறந்த பயிற்சிகளை இக்கல்லூரி அளிக்கிறது.

மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதிலும், நாளைய தலைவர்களை உருவாக்குவதிலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றி வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img