ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நடத்தி வரும் தையல் பயிற்சி கோவையில் கரும்புக்கடை, வெள்ளலூர், பிள்ளையார்புரம், செல்வபுரத்தில் நடத்தப்படுகிறது. இதன் லிபாஸ் தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழாவில் சுமையா இறை வசனத்துடன் விழாவை துவக்கினார்.
இதில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மக்கள் தொடர்பு செயலாளர் அப்துல் ஹக்கீம் கூட்டத்தில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பயிற்சி பெற்ற பெண்களை வரவேற்றார்.
இதில் இவ்வமைப்பின் கோவை மகளிர் பிரிவு தலைவி ஜஹீனா அகமது தலைமை உரையில் சமூகத்தில் கஷ்டப்படும் பெண்கள் சுயதொழில் செய்து முன்னேற வேண்டும், அவர்களின் பொருளாதார பின்னணியை மேம்படுத்தவும், கண்ணியமாக வாழவும் இந்த பேரியக்கம் 20 ஆண்டுகளாக தையல் பயிற்சி நடத்தி வருகிறோம் என்றார்.
இதில் இஎல்சிஇ மெடிக்கல் பவுண்டேஷன் நிறுவனர் வித்யா ராஜன், 𝙰𝚌𝚌𝚎𝚗𝚝𝚞𝚛𝚎 டெக்னாலஜி அசோசியேட் மேலாளர் பர்ஜானா அக்பர், டாக்டர் நிதா சலீம், CDTP பாலிடெக்னிக் கல்லூரி தங்கராஜ், சிறப்பு விருந்தினர் மௌலவி இஸ்மாயில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அமைப்பின் மகளிர் பிரிவு செயலாளர் ஷர்மிளா இந்த விழாவை தொகுத்து வழங்கினார். இவ்விழாவில் 140 பயிற்சி பெற்ற பெண்களுக்கு விருதாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.



