fbpx
Homeபிற செய்திகள்உதகையில் 7.5 லட்சம் மலர்களால் சிற்ப அலங்காரம்: மலர் கண்காட்சியை துவக்கிய மு.க.ஸ்டாலின்

உதகையில் 7.5 லட்சம் மலர்களால் சிற்ப அலங்காரம்: மலர் கண்காட்சியை துவக்கிய மு.க.ஸ்டாலின்

உதகை தாவரவியல் பூங்காவில் பொன்னியின் செல்வன் கதையின் அடிப்படையில், 7.5 லட்சம் மலர்களுடன் பிரம்மாண் டமாய் அமைக்கப்பட்ட சிற்பங்களுடன், 127வது உதகை மலர் கண்காட்சி 2025 முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

மலைகளில் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் தற்போது கோடை சீசன் களைகட்டி உள்ளது. இதனால் தினந்தோறும் ஆயிரக்க ணக்கான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
கோடை சீசனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக் கலைத்துறை சார்பில் இந்தாண்டு பல்வேறு கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப் பாக இந்த ஆண்டு கோடை விழா, கடந்த 3ம் தேதி காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து வாசனை திரவியங்கள் கண்காட்சி, ரோஜா கண்காட்சி ஆகிய மூன்று கண்காட்சிகள் நடைபெற்ற முடிந்துள்ளன.

இதனிடையே, கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கரு தப்படும் 127வது மலர் கண்காட்சியை, உதகை அரசு தாவரவியல் பூங்கா வில் தமிழ்நாடு முதல மைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத் தார். பின்னர் மலர் கண்காட் சியை அவர் பார்வையிட்டு ரசித்தார். அவருடன் துணைவியார் துர்கா ஸ்டாலினும் வந்திருந்து கண்காட்சியை கண்டு களித்தார்.

கண்காட்சி துவக்கவிழா வில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், எம்.ஆர். கே.பன்னீர் செல்வம் மற்றும் ஆ.ராசா எம்பி, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இந்த கண்காட்சியில் பூக்களைக் கொண்டு பல் வேறு அலங்காரங்கள் செய் யப்பட்டுள்ளன. குறிப் பாக இந்த கண்காட்சியில் 275 வகையான மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள் ளன. தாவரவியல் பூங் காவின் அலங்கார மேடையில் 40 ஆயிரம் தொட்டிகள் பல்வேறு வண்ணங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
பொன்னியின் செல் வன் கதையின் கரு அடிப்ப டையில் இந்தாண்டு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. பண்டைய காலத்தில் ராஜாக்கள் வாழ்க்கை, அவர்களின் அரண்மனை, யானைகள், வீரர்கள் உள்ளிட்ட சிற்பங்கள் மலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் மலர்களைக் கொண்டு பிரம்மாண்டமான முறையில் அரண்மனை நுழைவுவாயில் அமைக் கப்பட்டுள்ளது. பாரம் பரியத்தை நினைவுபடுத்தும் விதமாக ராஜராஜ சோழ னின் அரண்மனை போன்று, 2 லட்சம் கார்னேசன் உள்பட பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

சோழ அரசின் பெருமைகளை விளக்கும் விதமாக 65 ஆயிரம் பூக்களால் கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை வடிவம் போன்று அமைக் கப்பட்டுள்ளது. மேலும், 50 ஆயிரம் மலர்களைக் கொண்டு அன்னப்பறவை, கல்லணையிலிருந்து மலர் நீர்வீழ்ச்சி போன்ற அமைப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன.
இதேபோன்று 7 லட்சம் மலர்களால் செஸ், யானை என பல்வேறு அலங்காரங்கள் செய்யப் பட்டுள்ளன. இதேபோன்று கண்ணாடி மாளிகை, கள்ளிச்செடி மாளிகை புதுப்பிக்கப்பட்டு, அங்கும் அரியவகை தாவரங்கள் மற்றும் மலர் செடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு நடக்கும் மலர் கண்காட்சியில் சிறப்பு அம்சமாக, ஜெர் மனியம், சைக்ளோ பின், பால்சம், புதிய ரக ஆர்னமெண்டல்கேல், ஓரியண்டல் லில்லி, பேன்சி மேரிகோல்டு, ஜினியா, டெல்முனியம் உள்பட 275 வகையான விதைகள், நாற்றுகள் பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டு, மலர் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டது.

முதல் நாளான இன்றே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த மலர் கண்காட்சியைப் பார்த்து ரசித்தனர்.


தாவரவியல் பூங்காவின் நுழைவு வாயில் தொடங்கி, பூங்கா முழுவதும், வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது சுற்றுலாப் பயணிகள் கவனத்தை ஈர்த்துள்ளது.
இக்கண்காட்சி மே 25ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மலர் கண்காட்சி துவக்கவிழாவை முன்னிட்டு நீலகிரி மாவட் டத்திற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img