வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத் தில் அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா அண்ணா அரங்கில் நடைபெற்றது.
விழாவிற்கு வி.ஐ.டி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது: இந்தியா உயர்க ல்வியில் நாம் பின்தங்கி உள்ளோம். மத் திய, மாநில அரசுகள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தால், கல்விக்கு அதிகமாக செலவழித்தால் அதிகம் பேர் கல்வி பெற முடியும்.
அனைவருக்கும் உயர்கல்வி அறக் கட்டளையின் மூலம் இதுவரை 9,878 பேருக்கு ரூ.11 கோடி 86 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் இன்று மட்டும் 1,182 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் கல்வியாளர் கிருஷ்ணராஜ் வானவராயர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி பேசுகையில், “விரைவில் மூன்றாவது பொருளாதார நாடாக இந்தியா மாறும். சக்தி வாய்ந்த தேசமாக மாறிவிடும். இந்தியாவில் பெரிய பல்கலைக்கழகமாக ஒரு காலத்தில் வி.ஐ.டி வரும்“ என்றார்.
விழாவில் செயலாளர் ஜெ.லட்சு மணன், பொருளாளர் ஜவரிலால் ஜெயின், நிதி குழு தலைவர் வெங்கடசுப்பு, புலவர் பதுமனார், அறக்கட்டளை உறுப்பினர்கள் கே. எம்.தேவராஜ், கே.எம். ஜி.ராஜேந்திரன், டாக்டர் நர்மதா அசோக், பாலாஜி லோகநாதன், ருக்ஜி ராஜேஷ்குமார், ரத்தின நட ராஜன் ஆகியோர் பேசினர்.
முன்னதாக மயிலாம்பிகை குமரகுரு வரவேற்றார். முடிவில் திட்ட துணை இயக்குனர் சுந்தர் ராஜ் நன்றி கூறினார்.