சிமாட்ஸ் ஸ்கூல் ஆப் என்ஜினியரிங் கல்லூரி 19-வது பட்டமளிப்பு விழா, சிமாட்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
பட்டமளிப்பு விழாவை பல்லைக்கழக வேந்தர் என்.எம். வீரையன், சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 575 மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் சென்னை, ஐஐடி இயக்குனர் காமகோடி, பட்டங்களை வழங்கி பாராட்டிப் பேசினார். தன்னிறைவு பெற்ற தேசத்தைக் கட்டியெழுப்ப இளைஞர்கள் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்றார்.
சிறப்பு விருந்தினர்
சிறப்பு விருந்தினர்கள் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.துணை வேந்தர் சதாரம் சிவாஜி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் சிமாட்ஸ் பல்கலைக்கழக கல்வியியல் இயக்குனர் தீபக் நல்லாசாமி, இயக்குனர் ரம்யா தீபக் ஆகியோர் முன்னிலையில்,பதிவாளர் ஷீஜா வர்கீஸ், முதல்வர் ரமேஷ் ஆகியோர் மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.



