இந்தியாவின் முன்னணி சோப்பு பிராண்டுகளில் ஒன்றான சிந்தால், கடந்த ஏழு தசாப்தங்களாக தமிழ்நாட்டில் உள்ள நுகர்வோரின் வாழ்வில் அங்கமாக இருந்து வருகிறது.
சமூக மாற்றங்களை அங்கீகரிப்பதன் மூலமும், நுகர்வோரின் மாறிவரும் கோரிக்கைகளை பிரதிபலிப்பதன் மூலமும், இந்த பிராண்ட் தமிழ்நாட்டில் எப்போதும் தொடர்புடையதாக இருந்து வருகிறது, அதே நேரத்தில் அவர்களுக்கு நம்பகமான சரும ஆரோக்கியத்தை வழங்குகிறது.
சிந்தால் இன் புதிய விளம்பரப் பிரச்சாரமான , ‘கொதிக்கும் வெயிலில் தான் கனவுகள்ஜொலிக்கும்’ என்ற தலைப்பு இந்தப் பயணத்தை முன்னோக்கி கொண்டு செல்கிறது.
இன்று தமிழ்நாட்டுப் பெண்களின் அபிலாஷைகள் பரிணமித்துள்ளன என்ற நுண்ணறிவை மையமாக வைத்து இந்த ஃபிலிம் உருவாக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் அதிகாரப் பதவிகளை வகிக்க விரும்புகிறார்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் நீண்டகால விளைவை ஏற்படுத்த விரும்புகிறார்கள். தமிழ்நாடு தனது வரலாற்றில், அதிக எண்ணிக்கையிலான பெண் மாவட்ட ஆட்சியர்களைக் கொண்டுள்ளது.
இந்தப் பிரச்சாரத்தில், சிந்தால் உத்வேகமான உண்மையை கதாநாயகன் மூலம் கொண்டாடுகிறது, அவர், மாவட்ட ஆட்சியராக நடிக்கும்போது, தன் தங்கையை அவ்வாறே ஆக வேண்டுமென்று கனவு காணத் தூண்டுகிறார்.
TVC இணைப்பு https://www.youtube.com/watch?v=Bi6kxSFuGe8 தூசி, வெப்பம் மற்றும் மாசுபாடு ஆகியவற்றின் உருவகத்தின் மூலம், பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பொருட்படுத்தாமல், தங்கள் சொந்தக் கனவுகளை அடைய நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்வதற்கான அதிகாரமளிக்கும் செய்தியை வழங்குவதை சிந்தால் நோக்கமாகக் கொண்டுள்ளது.