fbpx
Homeபிற செய்திகள்கோ-ஆப்டெக்ஸ் மருதம் விற்பனை நிலையத்தில் புடவைகள் மேளா

கோ-ஆப்டெக்ஸ் மருதம் விற்பனை நிலையத்தில் புடவைகள் மேளா

90 வருட பாரம்பரியமிக்க கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் புடவைகள் மேளா 31.10.2025 முதல் 30.11.2025 வரை வ.உ.சி பார்க் அருகே அமைந்துள்ள கோ- ஆப்டெக்ஸ் மருதம் விற்பனை நிலையத்தில் நடைபெறுகிறது. புடவைகள் மேளா விற்பனையில் கண்கவர் வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் காஞ்சிபுரம் பட்டு சேலைகள், ஆரணி பட்டுப் புடவைகள், கோரா காட்டன் சேலைகள், நெகமம் காட்டன் சேலை கள், ஆயிரம் புட்டா சேலைகள், புதினம் காட்டன் சேலைகள், செடி புட்டா சேலைகள், செட்டிநாடு காட்டன் சேலைகள், திருபு வனம் பட்டு சேலைகள், மென்பட்டு சேலைகள், இயற்கை சாயமிட்ட பருத்தி காட்டன் சேலைகள், காஞ்சி காட்டன் சேலைகள், பரமக்குடி காட்டன் சேலைகள், சுங்குடி சேலைகள், சேலம் பட்டுப் புட வைகள், ஜெயங்கொண்டம் காட்டன் சேலைகள், சேலம் பிளாக் பிரிண்ட் காட்டன் புடவைகள், முகூர்த்த பட்டுப் புடவைகள், ஏராளமாக வரவழைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கோஆப் டெக்ஸ் மருதம் விற்பனை நிலையத்தில் புடவைகள் மேளா விற்பனை துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவினை கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் ப.அம்சவேணி மற்றும் முதுநிலை மேலாளர் வடி வமைப்பு மற்றும் உற்பத்தி ஜெகநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர். விழாவிற்கான ஏற்பாடு களை மருதம் விற்பனை நிலைய மேலாளர் செல்வதுரை, விஜயானந்த் மற்றும் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். முதல் விற்பனையை கோ-ஆப் டெக்ஸ் வாடிக்கையாளர் தீப்தி பெற்றுக் கொண்டார்.

வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஞாயிறு உட்பட அனைத்து விடுமுறை நாட்களிலும் மருதம் விற்பனை நிலையம் செயல்படும். மாதாந்திர சேமிப்பு திட்டம் ரூ.300-லிருந்து ஆரம்பமாகிறது. வாடிக்கையாளர்கள் 11 மாத சந்தா தொகையை செலுத்தினால் 12-வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமே செலுத்தும். சேமிப்புத்திட்ட வாடிக்கையாளர்கள் கூடுதல் முதிர்வுத் தொகைக்கு துணி களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் சேமிப்புத் திட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கூடுதல் சலுகையாக வருடம் முழுவதும் 30% சிறப்புத் தள்ளுபடி வழங்கப் படும் என முதுநிலை மண்டல மேலாளர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img