fbpx
Homeபிற செய்திகள்கோவையில் குப்பையில் கிடந்த ஒன்றரை பவுன் நகையை பத்திரமாக ஒப்படைத்த துப்புரவு பணியாளர்

கோவையில் குப்பையில் கிடந்த ஒன்றரை பவுன் நகையை பத்திரமாக ஒப்படைத்த துப்புரவு பணியாளர்

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண் 68 தூய்மை பணியாளரான முருகன் வயது (40). இவர் நேற்று (10ம் தேதி) காலை அவர் சிவானந்த காலனி விசிகே லேஅவுட் ல் பணிபுரியும் போது குப்பையில் ஒன்றரை சவரன் தங்க நகை கிடந்ததை கண்டறிந்தார். உடனே அவரது ஒப்பந்த சுகாதார மேற்பார்வையாளர் ஹரிஷ், மண்டல மேலாளர் ஜான் பிரிட்டோ, அரசு சுகாதார மேற்பார்வையாளர் கி.கார்த்திகேயன், சுகாதார ஆய்வாளர் பி.சரவணகுமார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார்.


பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர் அலிமா என்பவரிடம் அந்த நகை பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.குப்பையில் கிடந்த நகையை பத்திரமாக நேர்மையுடன் ஒப்படைத்த துப்புரவு பணியாளர் முருகனை மாநகராட்சி அதிகாரிகளும் அப்பகுதி மக்களும் வெகுவாகப் பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img