சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி யின் எட்டாவது ஆண்டு விழா கல்லூரியின் ஸ்ரீ வள்ளியப்பா கலையரங்கக் கூடத்தில் நடைபெற்றது. சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சி சாதனைகளை வெளிப்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த ஆண்டு விழாவிற்கு கல்லூரியின் துணைத் தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரியின் தலைவர் ஸ்ரீ வள்ளியப்பா தலைமை யேற்று சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா கொண்டாட்டங்களைத் துவக்கி வைத்தார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் கு.மை.காதர் நவாஸ் மாணவர்களின் சாதனைகள் அடங்கிய படத்தொகுப்புடன் கூடிய ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்தார்.
கல்லூரியின் துறை சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் பேராசிரியர்களின் ஆராய்ச்சிகள், பங்களிப்பு மாணவர்களின் ஆராய்ச்சிகள், விளையா ட்டுகள் மற்றும் பிற துறைகளில் சாதனைகள் என அவர் கல்லூரியின் சாதனைகளைப் பட்டியலிட்டார்.
என்.சந்தான கிருஷ்ணன், ஜனார்தன், வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
மேலும் கல்வியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ரூ.4,00,000 ஊக்கத்தொகை வழங்கப் பட்டது. கல்வியாண்டில் கல்வியில் முன்னிலை வகித்து படித்து முடித்து வெளியேறிய சிறந்த மாணவர்களுக்கு ரூ.75000 வழங்கப்பட்டது. விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஒரு பருவ கட்டணமாக தலா 28,000 வீதம் ரூபாய் 1,68,000 வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கல்லூரியில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ரூ.60,000, சிறந்த நாட்டு நலப்பணி திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், செஞ்சூருள் மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு ரூ.24,000, மாணவர்களில் சிறந்த தமிழ் மற்றும் ஆங்கில பேச்சாளர்களுக்கு ரூ.10,000 வழங்கப்பட்டது. நூலகத்தை நன்முறையில் பயன்படுத்திய மாணவர்களுக்கு ரூ.2000 மதிப்புள்ள புத்தகம் வழங்கப்பட்டது.
பொருளாராதார அள வில் பின்தங்கிய மாணவர்களுக்கு நிர்வாக உதவித் தொகையாக ரூ.4,15,000 மற்றும் பல்கலைக்கழக அளவில் மாணவர்களைத் தரவரிசையில் இடம்பெறச் செய்த துறைகளுக்கு ரூ.3,10,000 வழங்கி சிறப்பித்தனர்.
ஏறத்தாழ ரூ.15,00,000 கல்லூரி நிர்வாகத்தின் சார்பாக மாணவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த விழாவில் கல்லூரியின் இயக்குனர் முனைவர் வீ.கார்த்திக்கேயன், சோனா கல்விக் குழுமத்தின் முதல்வர்கள் முனைவர் ஏ.கனகராஜ், முனைவர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார், இ.ஜெ.கவிதா, பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்துக்கொண்டனர். முடிவில் காட்சித் தொடர்பியல் துறைத் தலைவர் முனைவர் ஆ.சாந்தி நன்றி கூறினார்.



