ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு 6 ஆறு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி தின விழா அணைமேட்டில் உள்ள ஜிஎஸ்டி ஆணையரகத்தில் கொண்டாடப்பட்டது.
சேலம் ஆணையர் ராமகிருஷ்ணன் தலைமை தாங் கினார்.
தெற்கு ரயில்வே சேலம் மண்டல கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா, மாநில ஜிஎஸ்டி இணை ஆணை யாளர் ஜெயராமன், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் பொது மேலாளர் இளங்கோ ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியையொட்டி நடைபெற்ற திறனறிவுப் போட்டிகள் மற்றும் சிறப்பாக அலுவல் செய்த அலுவலர்களுக்கும், உலக ரத்த தான தினத்தில் ரத்த தானம் செய்த அலுவலர்களுக்கும் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இணை ஆணையாளர் தீப்தி, உதவி ஆணையாளர் ஜெயசித்ரா உட்பட தொழில் முனைவோர்கள், ஏற்றுமதி யாளர்கள், சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள், வணிகர்கள், வியாபாரிகள், மத்திய மற்றும் மாநில அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர்.