fbpx
Homeபிற செய்திகள்ரோட்டரி சங்க கவர்னராக சுந்தர வடிவேலு பதவி ஏற்பு

ரோட்டரி சங்க கவர்னராக சுந்தர வடிவேலு பதவி ஏற்பு

ரோட்டரி மாவட்ட புதிய கவர்னராக, கோவையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் சுந் தரவடிவேலு பொறுப்பேற்றுக்கொண்டார். கோவை ஈச்சனாரி அருகே உள்ள செல்வம் மகால் அரங்கில் அதற்கான பதவி ஏற்பு நடந்தது. கேரளாவை சேர்ந்த முன்னாள் ரோட்டரி கவர்னர் விஜய குமார்கலந்து கொண்டு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில் நீலகிரி மாவட்ட தோடர் இன மக்களுக்கு இலவச வீடு கட்டி தருதல், கவுசிகா நதி வழித்தடம் மீட்டெடுத் தல், சைபர் கிரைம் குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

விழாவில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கோவை பிரபல வழக்கறிஞர்கள் பிரபு சங்கர், ஜெயகாந்தன், ராஜேந்திரன், ராஜசேகர் உட்பட கோவை, கேரளா மாநிலத்தின் பாலக்காடு, திருச்சூர், கொச்சின், போன்ற முக்கிய நகரங்களில் உள்ள ரோட்டரி சங்க நிர்வாகிகள் 176 பேர் உள்பட 6 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.;

படிக்க வேண்டும்

spot_img