fbpx
Homeபிற செய்திகள்67.59 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலை: அசோக்குமார் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்

67.59 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலை: அசோக்குமார் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்

கிருஷ்ணகிரி ஒன்றியம் அகசிப்பள்ளி ஊராட்சி கிட்டம்பட்டி கிராம தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை முதல், அகசிப்பள்ளி மேல் நிலை நீர்த்தேக்கத்
தொட்டி வரை 2,100 மீட்டர் தொலைவிற்கு, முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் 2024-2025 ஆம் ஆண்டு நிதி 67 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தார்சாலை அமைக்கப்படுகிறது.

இதற்கான பணிகளை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், கிழக்கு ஒன்றிய செயலாளர் கன்னியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், மாவட்ட கவுன் சிலர் ஜெயா ஆஜி, பஞ்., தலைவர் நாராயணன், கிளை செயலாளர்கள் ரமேஷ், செல்வம், பொன் னுசாமி, சுப்ரமணி,
மாது, மாதவன், செல்வம், ஐ.டி., பிரிவு வேலன், ஊர் கவுண் டர்கள் திம்மராயன், மாது, கோவிந்தன், தேவசமுத் திரம் துணைத் தலைவர் திம்மராயன், மாவட்ட வர்த்தகப் பிரிவு இணை செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img