கோவையில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டத்தில் எடுக் கப்பட்ட முடிவில் 07.4.2025 முதல் 24.4.2025 வரை அனைத்து மாவட்டங்களிலும் ஊழியர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் கூட்டமைப்பின் சார்பில் அரசிடம் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி 25ம் தேதி மாலை, 40,000 வருவாய்த்துறை அலுவலர்கள் கலந் துக் கொள்ளும், ஒரு மணி நேரம் வெளிநடப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் தலைவர் சக்திவேல், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் செயலாளர் அறிவழகன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சீனிவாசன், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு பெரியசாமி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சின்னசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தமிழக முதல்வர் வருவாய்த்துறையில் அங்கீகரிக்கப் பட்ட சங்கங்கள் ஒன்றிணைந்து ஏற்படுத்தியுள்ள கூட்டமைப்பின் நிர்வாகிகளை அழைத்து பேசி கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறை வேற்றி சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்த முன் வர வேண்டும்.
இதில் அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களின் பணி பாதுகாப்பினை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். வருவாய்த் துறை அலுவலர்களுக்கான சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடன் இயற்றிட வேண்டும்.
வருவாய்த்துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அதீதமான பணி நெருக்கடி ஏற்படுத்தப்படுவது தொடர்பாகவும் சுமூகமாக முடிவு எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.