fbpx
Homeபிற செய்திகள்ரூ.1 கோடி பெற்று பயனடைந்த ஓச்சேரி மகளிர் சுய உதவிக்குழுவினர் முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு

ரூ.1 கோடி பெற்று பயனடைந்த ஓச்சேரி மகளிர் சுய உதவிக்குழுவினர் முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு

தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழிவகைகளை ஏற்படுத்தி கொடுத்தமைக்காக நிறைந்நது மனம் என்ற நிகழ்ச்சியின் வாயிலாக தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.

2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.789 கோடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டதில் ரூ.789.51 கோடி இலக்கு எய்தப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட் டத்தை பொறுத்தவரை மொத்தம் 7651 குழு செயல்பட்டு வருகிறது. அதில் மொத்தம் ஏறத்தாள 90 ஆயிரம் மகளிர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் எண்ணற்ற சேவைகள் வழங்கி வருகிறது.

அதில் ஒரு பகுதியாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்புடன் இணைந்த மதி என்னும் மகளிர் குழுவிற்கு எந்த ஒரு பிணையம் இன்றி வங்கிக்கடன் ரூ.20 லட் சம் வரை வழங்கப்படுகிறது.

2024-25 ஆம் நிதியாண்டில் மொத்தம் 268 மகளிர் சுய உதவிக்குழுக்கள் புதியதாக துவங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மகளிர் சுய உதவிக்குழுக்களின் வளர்ச்சிக் காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதனைத் தொடர்ந்து, மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசின் மூலம் பல்வேறு கண் காட்சிகளான கல்லூரி சந்தை, இயற்கை சந்தை அடுக்குமாடி குடியிருப்பு சந்தை, மாவட்ட அளவிலான கண்காட்சிகள் மாநில அளவிலான கண்காட் சிகள் மற்றும் சாராஸ் போன்ற கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாது மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை இணையதள வழியில் விற்பனை செய்யவும், மகளிர் சுய உதவிக்குழுக்களின் பிரத்தியேக அங்காடியான மதி அனுபவ அங்காடியின் மூலமும் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2023-24 ஆம் நிதியாண்டில் மொத்தம் ரூ.712 கோடி இலக்காக நிர்ணயக்கப்பட்டு, அதில் ரூ.680 கோடி இலக்கு நிர் ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.789 கோடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள் ளது. அதில் நாளது தேதிவரை ரூ.789.51 கோடி இலக்கு எய்தப்பட்டுள்ளது.
இராணிபேட்டை மாவட்டம் காவேரிபாக்கம் ஒன்றியம் ஊராட்சி அளவிலான குழு
கூட்டமைப்பைச் சார்ந்த பெண்கள் கூறியதாவது:

ஓச்சேரி ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எங்கள் கூட்டமைப்பில் மொத் தம் 27 மகளிர் சுய உதவிக் குழுக்களில் மொத்தம் 450 உறுபினர்கள் இணைந்துள்ளனர் .


எங்கள் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பில் இணைந்துள்ள அனைத்து குழுக் களும் நேரடிக்கடன் பெற்று நல்ல முறையில் பயன்படுத்தி திரும்ப செலுத்தி வந்தோம் மேலும் எங்கள் கூட்டமைபில் உள்ள அனைத்து குழுக்களும் சமுதாய முதலீட்டு நிதி பெற்று கனி அங்காடி, இயற்கை முறையில் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை மரச்செக்கு அமைத்து அனைத்து வகையான எண்ணெய் வகைகள், மஞ்சள் பை விற்பனை, அழகுகலை, எம்ராயிடிங், செயற்கை ஆபரணங்கள் தயாரித்தல், பாக்குதட்டு தயாரித்தல், சிற்றுண்டி அமைதல், பூ வியாபாரம் மேற்கண்ட தொ ழில்களை செய்து வருகிறோம். இத்தொழில்களுக்கு சிறிய அள வில் கடன் பெற்று தொழிலில் முதலீடு செய்து வருமானம் ஈட்டி வருகிறோம்.

கடந்த ஆண்டு முதல்வர் போர்கால ஆட்சியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கவும், ஊராட்சி அளவிலான குழு கூடமைபிற்கு பெருங்கடன் வழங்கவும் தகவல் அளிக்கப்பட்டதின் அடிப்படை யில் முதல் தவனையாக ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பிற்கு ரூ.50 லட்சம் இந்தியன் வங்கி ஓச்சேரி கிளையின் மூலம் கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்டது .

கடன் பெற்ற எங்கள் கூட்டமைப்பு சுயஉதவி குழுக்களின் தொழிலுக்கு ஏற்றவாறு குழுக்களுக்கு கடன் வழங்கி தொழில் செய்ய மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இக்கடனை பயன்படுத்தி நல்லமுறையில் பயன்படுத்தி குறித்த நேரத்தில் திரும்ப செலுத்திவிடோம்.

பின்னர் மீண்டுமாக எங்கள் ஊராட்சி அளவிலான குழு விற்கு வங்கி மேலாளர் எங்கள் கூட்டமைப்பின் பதிவேடுகளை ஆய்வு செய்து ஒரு கோடி ரூபாய் வங்கி கடன் அனுமதித்து கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மார்ச் 8, மகளிர் தினத்தன்று கடன் உதவி வழங்கி நெகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

இப்பெருங்கடன் மூலம் ஓச்சேரி கூட்டமைப்பில் இணைந்துள்ள குழுக்களின் தொழில்களுக்கு ஏற்றவாறு கடன் வழங்கினர். ஒவ்வொரு சுய உதவி குழுக்களும் கனி அங்காடி, இயற்கை முறையில் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை மரச்செக்கு அரைத்து அனைத்து வகையான எண்ணெய் வகைகள், மஞ்சள் பை விற்பனை, அழகுகலை, எம்ராயிடிங் உள்ளிட்ட தொழில்களை செய்துவர இக்கடன் உதவி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இப்போது எங்கள் தொழில்களை அதிக அளவில் உற்பத்தி செய்யவும் அவ்வாறு உற்பத்தி செய்த பொருட்களை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் சந்தைப்படுத்தவும் விற்பனை அதிகரிக்கவும் எங்களின் மாத வருமானம் அதிகரிக்கவும் குழு உறுப்பினர்களின் தனிநபர் வருமானம் ஈட்டவும் எங்கள் கூட்டமைப்பை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறது.

இந்த நல்வாய்ப்பினை எங் களுக்கு வழங்கிய தமிழ்நாடு முதல்வர், துணை முதல்வர் ஆகி யோருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள் கிறோம்.
இவ்வாறு கூறினர்.

படிக்க வேண்டும்

spot_img