கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2024-&25-ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக மாணவர் மன்ற நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, பி.காம். கணக்கியல் மற்றும் நிதியியல் துறை, மூன்றாமாண்டு மாணவர் சித்தார்த், எஸ்.கோபால், மாணவர் மன்றத் தலைவராக தேர்வு செய்யப் பட்டுள்ளார். பி.எஸ்சி., தகவல் தொழில்நுட்பத் துறை மூன்றாமாண்டு மாணவர், எம்.கருப்பசாமி, துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும், பி.காம்., சி.எம்.ஏ., துறை இரண்டாமாண்டு மாணவி, எஸ்.மானஸா மாணவர் மன்றச் செயலாளராகவும், பி.காம். பிரபஷனல் அக்கவுண்டிங் துறை, இரண்டாமாண்டு மாணவர் ஜி. தர்ஷன், துணைச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் துறை சார் மாணவப்பிரதிநிதிகள் தலைவர், துணைத்தலைவர், செயலாளர், இணைச் செயலாளர் பதவிகளுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு, ஸ்ரீராம கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், பதவிப் பிரமாணம் செய்துவைத்து வாழ்த்தினார்.
பின்னர் மாணவர் மன்ற நிர்வாகிகள் மற்றும் துறைசார் பிரதிநிதிகள் உறுதிமொழி ஏற்று, பதவியேற்றுக் கொண்டனர். இவ்விழாவில் அனைத்துத் துறைத்தலைவர்கள் கலந்துகொண்டனர்.