நாமக்கல் புறவழிச்சாலை திட்டத்தின் 2ம் கட்ட பணிகளை கே.ஆர்.என் ராஜேஸ்குமார் எம்பி தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், மரூர்ப் பட்டியில் நாமக்கல் நகருக்கு ரூ.194 கோடி மதிப்பீட்டில் 4 கட்டங்களாக நடைபெற்று வரும் புறவழிச்சாலை திட்டத் தின், இரண்டாம் கட்ட பணி யான மரூர்ப்பட்டி முதல் வேட்டாம்பாடி வரை ரூ.47.65 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிகளுக்கு பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் எம்எல்ஏ, முன்னி லையில் அடிக்கல் நாட்டினார்.
நாமக்கல் புறவழிச்சாலை தேசிய நெடுஞ்சாலை 44 இல் கி.மீ. 249/113ல் முதலைப்பட்டியில் தொடங்கி தேசிய நெடுஞ்சாலை 44 இல் கிமீ. 257ல் (வள்ளிபுரம்) முடிவடையும் வகையில் 22.387 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட உள்ளது.
இப்புறவழிச்சாலை அமைப்பதற்காக 11 கிராமங்களில் மொத்தம் 14324 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவும் 33.29 ஏக்கர் நிலம் நில மாற்றம் செய்யப்படவும் வேண் டும். 119.35 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், முதலைப்பட்டியி லிருந்து திருச்சி சாலை வரை மூன்று கட்டங்களாக புறவழிச் சாலை அமைப்பதற்காக சி.ஆர் ஐ.டி.பி திட்டத்தின் கீழ் 12 கி.மீ நீளத்திற்கு ரூ.194 கோடிக்கு நிர் வாக ஒப்புதல் பெறப்பட்டது.
முதற்கட்டப்பணியாக முத லைப்பட்டியிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை 1 கி.மீ நீளத்திற்கு ரூ.25 கோடிக்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டு பணி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது 4 கி.மீ நீளத்திற்கு ரயில்வே மேம்பாலம் நீங்கலாக ரூ.47.65 கோடி மதிப்பீட்டில் மரூர்பட்டியிலிருந்து வேட்டாம் பாடி வரை தற்போது துவங்கப்பட்டுள்ளது.
மூன்றாவது கட்டப்பணியாக வேட்டாம்பாடியிலிருந்து திருச்சி சாலை வரை 6 கி.மீ நீளத்திற்கு ரூ.50.50 கோடிக்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
நான்காவது கட்டப்பணியாக திருச்சி சாலை யிலிருந்து வள்ளிபுரம் வரை (கி.மீ 12/0 22/387) கி.மீ 2/0 முதல் 22/387 வரை நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் நில எடுப்பு பணிகள் முடிவுற்றவுடன் புறவழிச்சாலை அமைக்க நிர்வாக அனுமதி பெறப் பட்டு பணிகள் துவங்கப்பட்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இந்நிகழ்ச்சியில், அட்மா குழுத் தலைவர் பழனிவேல், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.