fbpx
Homeபிற செய்திகள்பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் புதிய முதல்வராக ஆர்.பரமேஸ்வரன் பொறுப்பேற்பு

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் புதிய முதல்வராக ஆர்.பரமேஸ்வரன் பொறுப்பேற்பு

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி புதிய முதல்வராக முனைவர்.ஆர். பரமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சுமார் 25 ஆண்டுகள் கொங்கு பொறியியல் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

இவர் 45 எஸ்சிஐ உட்பட, புகழ்பெற்ற சர்வதேச இதழ்களில் 65 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். மேலும் தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகளில் 70 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். அவர் 4 புத்தக அத்தியாயங்களை எழுதியுள்ளார்.


ஏஐசிடிஇ, யூஜிசி, டீஎஸ்டி, மற்றும் எம்எஸ்எம்இ உள்ளிட்ட முன்னணி அமைப்புகளிடமிருந்து ரூ.2.86 கோடி நிதி உதவியில் 7 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

2010 முதல் 2019 வரை கொங்கு பொறியியல் கல்லூரியில் மெக்கட்ரானிக்ஸ் பொறியியல் துறையின் தலைவராக பணியாற்றினார், அங்கு அவர் கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை சார்ந்த சிறப்பான முன்னெடுப்புகளை செய்தார்.

மேலும் அவர் டீபிஐ@கேஈசி இன் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு, ரூ.7.5 கோடி நிதியினை பெற்றுள்ளார். இதன் மூலம் 136 தொடக்க நிறுவனங்கள் பயன்பெற்றுள்ளன புதுமை சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்தவும், டீபிஐ மூலம் தொழிற்சாலை சார்ந்த திறன்களை வளர்க்கவும், உறுதியான அடித்தளங்களை உருவாக்கவும் இவர் செயல்பட்டார்.

கல்லூரியின் தாளாளர் ஏ.கே. இளங்கோ, முன்னாள் முதல்வர் முனைவர் வி.பாலுசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img