கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் ஒன்றிய, நகர திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 146 – ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி காமராசர் பேருந்து நிலையத்தி லிருந்து தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா படம் ஏந்தி பெரியார்பட ஊர்லமாக சென்று காவேரிப்பட்டணம் பாலக்கோடு பிரிவு சாலை அருகாமையிலுள்ள தந்தை பெரியார்
சிலைக்கு கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோ. திராவிடமணி தலைமையில் மாலை அணிவித்து, சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்று, இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச் சிக்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் தி. கதிரவன், சி.சீனிவாசன், ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், ஒன்றியச் செயலாளர் பெ. செல்வேந்திரன், திராவிடர் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வே.புக ழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ப.க.தலைவர் ச.கிருட்டினன், மாவட்ட ப.க. துணைச் செயலாளர் மா.சிவசங்கர், கிருட்டினகிரி ஒன்றியத் தலைவர் த.மாது, ஒன்றியச் செயலாளர் கி.வேலன், கிருட்டினகிரிநகர செயலாளர் அ.கோ. இராசா, திமுக ஒன்றிய அவைத் தலைவர் இளங்கோவன், ஒன்றிய பொருளாளர் பிரகாஷ், கி.கோவிந்தராஜ் அபிகவி, பையூர் பரத், மோகன், சிபிஅய். ஆர். சங்கர், விசிக ஒன்றிய செயலாளர்பெ.சசிகுமார், ஒன்றிய பொருளார் ரகு தேவராஜ், புலி இராஜேஷ், வணிகரணி செந்தில், நகர பொருளாளர் சந்திஸ், பன்னியாண்டி சமூக நல சங்க மாவட்டச் செயலாளர் தாமோதரன், பெரியசாமி, மக்கள் அதிகாரம் அருண், திராவிடர் கழக மாவட்ட விவசாயணி தலைவர் இல. ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பூ. இராசேந்திரபாபு, மகளிரணி சி.அஞ்சலி, கல்லூரி மாணவரணி தோழர் கி.வீரமணி, பெரியார் பிஞ்சுகள் தி. அ.அனலரசு, தி.அ.அறிவுக்கனல், செ.வீரபா ண்டி, மா.அன்புச் செல்வன், மா.அறிவுச்செல்வன் மற்றும் தி.க., திமுக., விசிக., சிபிஐ. உள்ளிட்ட கட்சிகளின் பொறுப்பார்களும் தோழர்க ளும் கலந்துகொண்டு இனிப் புகள் வழங்கி, பெரியார் சிலை க்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



