fbpx
Homeபிற செய்திகள்கொத்தட்டை மாரியம்மன் கோவில் விழாவில் பட்டிமன்றம்

கொத்தட்டை மாரியம்மன் கோவில் விழாவில் பட்டிமன்றம்

கடலூர் கொத்தட்டை மாரியம்மன் கோவில் ஆலய திருவிளக்கு பூஜை மற்றும் ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு, தச்சக்காடு ஆசிரியர், கவிஞர் லட்சுமிநாராயணன் தலைமையில் இறை நெறியால் பெரிதும் பயன் பெறுவோர் ஆண்களா? பெண்களா? என்னும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.
இதில் ஆண்களே என்னும் அணியில் தில்லை. செல்வம், சிவப்பிரியா, பெண்களே என்னும் அணியில் கீர்த்தனா, ரேவதி குமரகுரு, ஆசிரியை பசுபதி கலந்துகொண்டு வாதிட்டனர்.
விழாவின் நிறைவாக சிறப்பு ஆராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை மாரியம்மன் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img